இறக்கப்போவது தெரியாமல் குடும்பத்தோடு செல்பி எடுத்த இலங்கை பிரபலம்... சோகத்தை ஏற்படுத்தும் இலங்கை குண்டுவெடிப்பு..! Description: இறக்கப்போவது தெரியாமல் குடும்பத்தோடு செல்பி எடுத்த இலங்கை பிரபலம்... சோகத்தை ஏற்படுத்தும் இலங்கை குண்டுவெடிப்பு..!

இறக்கப்போவது தெரியாமல் குடும்பத்தோடு செல்பி எடுத்த இலங்கை பிரபலம்... சோகத்தை ஏற்படுத்தும் இலங்கை குண்டுவெடிப்பு..!


இறக்கப்போவது தெரியாமல் குடும்பத்தோடு செல்பி எடுத்த இலங்கை பிரபலம்... சோகத்தை ஏற்படுத்தும் இலங்கை குண்டுவெடிப்பு..!

இலங்கையில் நேற்று எட்டு இடங்களில் தொடர்ந்து நடந்த கொடூர குண்டுவெடிப்பில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 24 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா மாயதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோரும் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.இது அவர்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது இலங்கை மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ங்ரிலா என்னும் உயர்தர நட்சத்திர ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பிலேயே தாயும், மகளும் இறந்தனர். அவர்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. குண்டு வெடிப்புக்கு முன்னர் கொழும்புவில் உள்ள ஹோட்டலில் உணவருந்தும் படத்தை குடும்பத்தோடு செல்பி எடுத்தும் போட்டிருந்தார்.

அப்போது அதற்கு லைக்ஸ் தட்டிய அவரது ரசிகர்கள், அவர் இறந்த செய்தியை கேட்டு தற்போது வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :