புற்றுநோய்க்கு வேட்டு வைக்கும் பனங்கிழங்கு...! Description: புற்றுநோய்க்கு வேட்டு வைக்கும் பனங்கிழங்கு...!

புற்றுநோய்க்கு வேட்டு வைக்கும் பனங்கிழங்கு...!


புற்றுநோய்க்கு வேட்டு வைக்கும் பனங்கிழங்கு...!

பனை மரத்தை நம் முன்னோர்கள் ‘கற்பகத்தரு’ என்றே சொல்லுவார்கள். பனையின் அனைத்துப் பாகங்களுமே மனிதர்களுக்கு பல்வேறு வகையிலும் பயன்படக் கூடியவை. அதிலும் பனங்கிழங்குவின் பயன்கள் மிக அதிகம். பனங்கிழங்குக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் உண்டு.

பனங்கிழங்கு பொதுவாக பொங்கல் பண்டிகைக் காலத்தில் வீட்டில் இருக்கும். அதை அந்த நேரத்தில் மட்டுமே சாப்பிடுகிறோம். ஆனால் பனங்கிழங்கை எப்போதுமே சாப்பிட்டு வந்தால் பல சிக்கல்களும் தீரும்.

இந்த பனங்கிழங்கை வேகவைத்து மிளகு, உப்புத்தூள் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும். பனங்கிழங்கை நறுக்கி, மாவாக அரைத்து தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து புட்டு போலவும் சாப்பிடலாம்.

அடையும் செய்து சாப்பிடலாம். பனங்கிழங்கு மாவுடன் தண்ணீர் சேர்த்து, பிசைந்து அடை செய்தும் சாப்பிடலாம். இது தசைகளை வலுவாக்கும்.

ரத்தப்புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்ரலும் பனங்கிழக்குக்கு உண்டு. இதில் உள்ள விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகருத்து, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களையும் கணிசமாக உயர்த்துகிறது. மலக்சிக்கலையும் தடுக்கிறது.


நண்பர்களுடன் பகிர :