மண் பானைக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை... வீட்டில் சிறு குழந்தை இருக்கிறதா? இதை படிச்சுடுங்க...! Description: மண் பானைக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை... வீட்டில் சிறு குழந்தை இருக்கிறதா? இதை படிச்சுடுங்க...!

மண் பானைக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை... வீட்டில் சிறு குழந்தை இருக்கிறதா? இதை படிச்சுடுங்க...!


மண் பானைக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை...  வீட்டில் சிறு குழந்தை இருக்கிறதா? இதை படிச்சுடுங்க...!

‘’ஊருக பிள்ளை உசுரை எடுக்கும்’’ன்னு கிராமப் பகுதியில் சொலவடை சொல்வார்கள். அதாவது தவழும் குழந்தை பாடாய், படுத்தி எடுத்துவிடும் என்பது இதன் அர்த்தம். அப்படி தவழ்ந்து தோட்டத்துக்குள் வந்த ஒரு குழந்தை, மண் பானைக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தைகளை ஐந்து வயது வரை வளர்ப்பது என்பதே மிகவும் சவாலான விசயம். முதல் ஒரு வயது வரை குழந்தைகளால் தங்களுக்கு பசிக்கிறது என்று கூட சொல்லத் தெரியாது. அவர்கள் தங்கள் யுணர்வை அழுகையாகவே வெளிப்படுத்துவார்கள். இதனால் பெற்றோர்கள் ராத்திரியும், பகலுமாக தூங்காமல் இருந்து கவனிப்பார்கள். குழந்தைகள் தவழ்ந்து போகும் ஸ்டேஜ் தான் மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டிய பருவம்.

இப்படித்தான் தவழும் நிலையில் உள்ள தனது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் அந்த குழந்தையின் தாய். அப்போது தோட்டத்துக்கு தவழ்ந்து வந்த அந்த குழந்தை, அங்கு தண்ணீர் ஊற்ற வைத்திருந்த மண்பானைக்குள் போய் விட்டது. இதனால் அதன் வயிற்றின் கீழ் பகுதி அதற்குள் சிக்கிவிட்டது.


குழந்தையை அவரது தாயார் வெளியே எடுக்க முயற்சித்தார். மண் பானையை உடைத்து குழந்தையை வெளியே எடுக்கலாம் என்றால், அது குழந்தையின் உடலில் கீறல் காயங்களை ஏற்படுத்தலாம் என்னும் அச்சம் எழுந்துள்ளது. கடைசியில் அங்கிருந்த ஒரு சிறுவனும், குழந்தையின் தாயும் போராடி குழந்தையை பானையில் இருந்து வெளியே எடுத்தனர்.

உங்க வீட்டிலும் தவழும் நிலையில் உள்ள குழந்தைகள் இருந்தால் உஷாராகவே இருங்க...


நண்பர்களுடன் பகிர :