5 கோடி பேரில் ஒருவருக்கே இருக்கும் அரிதான பிரச்னை... 99 வயது பாட்டியின் உடலில் இருந்த மருத்துவ அதிசயம்..! Description: 5 கோடி பேரில் ஒருவருக்கே இருக்கும் அரிதான பிரச்னை... 99 வயது பாட்டியின் உடலில் இருந்த மருத்துவ அதிசயம்..!

5 கோடி பேரில் ஒருவருக்கே இருக்கும் அரிதான பிரச்னை... 99 வயது பாட்டியின் உடலில் இருந்த மருத்துவ அதிசயம்..!


5  கோடி பேரில் ஒருவருக்கே இருக்கும் அரிதான பிரச்னை...  99 வயது பாட்டியின் உடலில் இருந்த மருத்துவ அதிசயம்..!

வடமேற்கு பசிபிக் பகுதியைச் சேர்ந்த ரோஸ்மேரி பெர்லி என்ற மூதாட்டி தனது 99வது வயதில் இரு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். அவரது உடலை மருத்துவக் கல்லூரி மாணாக்கர்களின் ஆராய்ச்சிக்காக அவரது உறவினர்கள் தானம் செய்திருந்தனர்.

அந்த உடலானது மருத்துவக் கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது.ஆராய்ச்சிக்காக அவரது உடலை அண்மையில் தான் வெளியே எடுத்தனர். இந்நிலையில் ரோஸ்மேரியின் உடலை ஆராய்ச்சி செய்த மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் சிட்ரஸ் இன்வர்சல் என்ற அரியவகை பிரச்னையினால் ரோஸ்மேரி பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளான வயிறு, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடன் என அனைத்து உறுப்புகளுமே இடம் மாற்றி இருந்திருக்கிறது. அதாவது இடதுபுறம் இருக்க வேண்டிய உறுப்புகள் வலதுபுறமாகவும், வலதுபுறம் இருக்க வேண்டிய உறுப்புகள் இடதுபுறமாகவும் மாறி இருந்திருக்கிறது. இதில் இதயம் மட்டும் தான் அனைவரையும் போல் இடதுபுறமே இருந்துள்ளது.

உடல் இயக்கத்துக்கு அவசியமான முக்கிய உறுப்புகள் அனைத்தும் இடம்மாறி இருந்தாலும் 99 வயது வரை ஆரோக்கியமாகவே வாழ்ந்துள்ளார் இந்த பாட்டி. இந்த பாட்டி தனது கணவரோடு சேர்ந்து விவசாயப் பண்ணை, செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்துள்ளார். ஐந்துகோடி பேரில் ஒருவருக்குத் தான் இப்படி உடல் உறுப்புகள் மாறி இருக்குமாம். இந்த பாட்டியின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்கு நல்ல தீனி தான்!


நண்பர்களுடன் பகிர :