காதல் ரசம் சொட்ட போட்டோ சூட்..ஆற்றில் விழுந்த மணமக்கள்... இணையத்தில் வைரலாகும் கேரள வீடியோ...! Description: காதல் ரசம் சொட்ட போட்டோ சூட்..ஆற்றில் விழுந்த மணமக்கள்... இணையத்தில் வைரலாகும் கேரள வீடியோ...!

காதல் ரசம் சொட்ட போட்டோ சூட்..ஆற்றில் விழுந்த மணமக்கள்... இணையத்தில் வைரலாகும் கேரள வீடியோ...!


காதல் ரசம் சொட்ட  போட்டோ சூட்..ஆற்றில் விழுந்த மணமக்கள்...   இணையத்தில் வைரலாகும் கேரள வீடியோ...!

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. அதேபோல் இப்போது இன்னொரு கேரள ஜோடியின் வீவீயோ வைரலாகி வருகிறது.

திருமணம் படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும் சேரும் போது கல்யாண ஆல்பமே கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

அந்த வகையில் கேரளத்தில் அண்மையில் மணமான தம்பதிகளான திஜின்_ஷில்பா ஆகியோரை ஒரு புகைப்படக்காரர் அவுட்டோர் சூட்டிங்கிற்காக பம்பை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்களை அங்கு நின்ற ஒரு தோணியில் அமரச் சொல்லி, திஜின் கையில் வாழை இலை ஒன்றைக் கொடுத்தார். பக்கத்தில் தோணிகளில் நின்றவர்கள் நதியில் இருந்து தண்ணீரை எடுத்து இவர்களின் மேல் மழை பொழிவது போல தெளித்தனர். திஜின், தன் மனைவி ஷில்பாவுக்கும் சேர்த்து வாழை இலையை பிடித்துக் கொண்டு இருப்பது போலவும், மழை பெய்வது போலவும், காதல் ரசம் சொட்ட படம் எடுக்க திட்டம் போட்டார் புகைப்படக்காரர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி சரிந்து விழுந்து, மணமக்கள் இருவரும் தண்ணீருக்குள் விழுந்தனர். இதை அங்கு இருந்தவர்கள் வீடீயோவாக பதிவு செய்ய, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :