முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..! Description: முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..!

முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..!


முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதை மட்டும் செய்யுங்க போதும்..!

தலைமுடி தான் நம் மொத்த அழகையும் காட்டும் பொக்கிஷம். என்ன தான் வெள்ளையாக, அழகாக இருந்தாலும் ஆணாக இருந்தால் தலை நிறைய முடியும், பெண்ணாக இருந்தால் நீளமான கூந்தலும் இருப்பதே அழகாக இருக்கும் தானே? அப்படி அமைய தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படி அடர்த்தியாக இருக்க இதை மட்டும் செய்யுங்க போதும்...

இதற்கு தேங்கா எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய், கற்றாழை, வெந்தயம் ஆகியவையே போதும். முதலில் கற்றாழையை சிறு,சிறு பகுதிகளாக உடைக்க வேண்டும்.

இப்போது அதனுள் ஜெல் போன்ற பகுதி தெரியும். அதற்குள் சிறிது வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை மூடி நூலால் கட்டிவிட வேண்டும்.

இப்போது ஒரு பாட்டியிலில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குள் வெந்தயத்தோடு சேர்த்து கட்டி வைத்திருக்கும் கற்றாழையை போட வேண்டும். இப்போது பாட்டிலை மூடிவிட்டு, இதை 21 நாள்களுக்கு ஊறவைக்க வேண்டும். 21 நாள்களுக்குப் பிறகு இந்த எண்ணையை தினசஎரி தேய்த்து வந்தால் முடி உதிர்தல் பிரச்னை தீர்ந்து விடுவதோடு, உங்களின் தலைமுடியும் அடர்த்தியாகவளரும். இது நமது கண்களுக்கும் சூட்டைத் தணித்து, நல்ல குளிர்ச்சியைத் தரும்.


நண்பர்களுடன் பகிர :