சென்னையில் ஒருநாள் படப்பாணியில் கேரளத்தில் நிஜ சம்பவம்... குழந்தையின் உயிரைக்காக்க ஆம்புலன்ஸ்க்கு கைகொடுத்த கேரளம்..! Description: சென்னையில் ஒருநாள் படப்பாணியில் கேரளத்தில் நிஜ சம்பவம்... குழந்தையின் உயிரைக்காக்க ஆம்புலன்ஸ்க்கு கைகொடுத்த கேரளம்..!

சென்னையில் ஒருநாள் படப்பாணியில் கேரளத்தில் நிஜ சம்பவம்... குழந்தையின் உயிரைக்காக்க ஆம்புலன்ஸ்க்கு கைகொடுத்த கேரளம்..!


சென்னையில் ஒருநாள் படப்பாணியில் கேரளத்தில் நிஜ சம்பவம்...  குழந்தையின் உயிரைக்காக்க ஆம்புலன்ஸ்க்கு கைகொடுத்த கேரளம்..!

சென்னையில் ஒரு நாள் படத்தில் உடல் உறுப்பு தானத்துக்காக மொத்த சென்னையும் ஒத்துழைத்து மக்களின் வாகனங்கள் ஒத்துழைக்க ஆம்புலன்ஸ் செல்லும். அதேபோல் கேரளத்தில் நிஜ சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கே.எல் 60 ஜே 7739 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ் மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வருகிறது. வழி ஏற்படுத்திக் கொடுக்கவும் என கேரள சோசியல் மீடியாக்களில் ஒரு புகைப்படம் வைரலானது. கேரள திரைத்துறையினர் மட்டுமல்லாது முதல்வரே அதை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த ஆம்புலன்ஸில் பிறந்து 15 நாள்களேயான குழந்தை இருந்தது. அதன் உயிரைக்காக்க 12 மாவட்ட மக்கள், 400 கிலோ மீட்டர் தூரத்தை இப்படி பாதுகாப்பாக கடத்தி இருக்கிறார்கள்.

கர்நாடகத்தின் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் இதயகுழாய் பாதிப்பினால் அந்த குழந்தை சிகிட்சை எடுத்து வந்தது. உயர் சிகிட்சைக்கு குழந்தைக்கு திருவனந்தபுரம் செல்ல வேண்டி இருந்தது. அவசரமாக செல்ல வேண்டிய காரணத்தால் வானூர்தி வழியாக செல்லத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் உடல்நிலை வானூர்தி பயணத்துக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர முடிவு செய்தனர்

நேற்று காலை 11 மணிக்கு இந்த பயணம் துவங்கியது. அது பேஸ்புக்கில் நேரலையும் செய்யப்பட்டது. கேரள சுகாதாரத்துறை அமைச்சரே இதைப் பற்றித் தெரிந்து கொண்டு திருவனந்தபுரம் வரை செல்ல பயண நேரம் நீளும். இதனால் கொச்சினில் சிகிட்சை எடுக்கலாம் என சில பரிந்துரைகள் செய்தார்.

இதனையடுத்து மங்களூரில் இருந்து, 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கொச்சினை நோக்கி புறப்பட்டது ஆம்புலன்ஸ். பொதுவாக இந்த தூரத்தை ஆம்புலன்ஸ் கடக்க பத்து மணி நேரம் வரை ஆகும். ஆனால் பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த தூரத்தை வெறும் ஐந்தரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கடந்தது.இந்த ஆம்புலன்ஸை ஓட்டிய ஹாசனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :