பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்... பெண் சொன்ன விசயத்தை கேட்டு தலை தெறிக்க ஓடினார்..! Description: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்... பெண் சொன்ன விசயத்தை கேட்டு தலை தெறிக்க ஓடினார்..!

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்... பெண் சொன்ன விசயத்தை கேட்டு தலை தெறிக்க ஓடினார்..!


பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்... பெண் சொன்ன விசயத்தை கேட்டு தலை தெறிக்க ஓடினார்..!

கத்தியைக் காட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் ஒருவரை ஒரு பெண் ஒரு விசயம் செய்து ஓட விட்டுள்ளார். அது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 7 வயது குழந்தையோடு, வீட்டுக்கு பொருள்கள் வாங்க கடைவீதிக்கு சென்று உள்ளார். பொருள்களை வாங்கி விட்டு, வீட்டுக்கு திரும்ப ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் மின்னல் வேகத்தில் சென்ற இளைஞர் ஒருவர் இந்த பெண்ணை பார்த்து விட்டே சென்றிருக்கிறார்.

போன அந்த இளைஞர் திரும்பவும் வந்த இளைஞர், இளம் பெண்ணையும், அந்த குழந்தையையும் தனது பைக்கில் ஏறச் சொல்லியுள்ளார். மேலும் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு ட்ராப் செய்கிறேன் என சொல்லியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண், பராவாயில்லை. நான் ஷேர் ஆட்டோவில் போய்க்குறேன். என சொல்ல, அந்த இளைஞரும் விடாப்பிடியாக ஏறச்சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

தொடர்ந்து அந்த இளைஞர் பைக்கை ஓரத்தில் வைத்துவிட்டு, தன் பாக்கெட்டில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டி தப்பாக நடக்க முயற்சி செய்தார். அப்போது பக்கத்திலும் யாரும் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்த அந்த பெண், சற்றும் யோசிக்காமல் நான் ஒரு எய்ட்ஸ் நோயாளி...என்னை என்ன வேண்ணா பண்ணிக்கோங்க என சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட அந்த இளைஞர் கத்தியைத் தூங்கிப் போட்டு அந்த இடத்தை விட்டே ஜூட் விட்டார். அதன் பின்னர் அந்த பெண் காவல் நிலையத்துக்குப் போய், தான் எய்ட்ஸ் நோய் குறித்து பொய் சொல்லி தப்பித்த விசயத்தை சொல்லியிருக்கிறாரு. ஒரே ஒரு பொய்யில் தவறாக நடக்க வந்த வாலிபரைத் தெறிக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின் அந்த பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :