சிறுவயதில் தன்னை கொடூரமாக கொடுமைப்படுத்திய தாய்... ரகசியம் உடைத்த பிரபல நடிகை.... ஆறுதல் சொன்ன கணவர்..! Description: சிறுவயதில் தன்னை கொடூரமாக கொடுமைப்படுத்திய தாய்... ரகசியம் உடைத்த பிரபல நடிகை.... ஆறுதல் சொன்ன கணவர்..!

சிறுவயதில் தன்னை கொடூரமாக கொடுமைப்படுத்திய தாய்... ரகசியம் உடைத்த பிரபல நடிகை.... ஆறுதல் சொன்ன கணவர்..!


சிறுவயதில் தன்னை கொடூரமாக கொடுமைப்படுத்திய  தாய்...   ரகசியம் உடைத்த பிரபல நடிகை.... ஆறுதல் சொன்ன கணவர்..!

‘எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள். காலப்போக்கில் காயமெல்லாம் மாறிப் போகும் மாயங்கள்” என ஆட்டோகிராபில் சினேகா பாடும் பாடல் ஏக பிரசித்தம். அந்த பாடல் வரியைப் போலவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சோகமான ஒரு காலம் இருக்கும். அப்படி ஒரு சோகத்தை நடிகை சங்கீதா இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை சங்கீதா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அன்புள்ள அம்மா, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, 13 வயதில் இருந்து வேலை செய்ய வைத்ததற்கு நன்றி. அனைத்து பிளாங்க் செக்களில் கையெழுத்திட வைத்ததற்கு நன்றி.

வாழ்வில் வேலைக்கே செல்லாத உங்களின் குடிகார, போதை வஸ்துகளுக்கு அடிமையான மகன்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி. நான் போராடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி. அடிக்கடி என் கணவரை தொந்தரவு செய்து, என் குடும்ப நிம்மதியை கெடுப்பதற்கு நன்றி. ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாதென எனக்கு கற்றுக்கொடுத்ததற்கு தேங்க்யூ. ஒருநாள் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு என்னைப் பார்த்து பெருமை கொள்வீர்கள்” என ட்வீட் செய்துள்ளார் சங்கீதா.

சங்கீதா பாடகர் க்ரீஷை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சங்கீதாவின் டிவிட்க்கு பதில் ட்விட்டியுள்ள க்ரீஷ், ‘’நீ உன் குடும்பத்துக்காக செய்த அனைத்தும் தெரியும். நீ பட்ட கஷ்டமும் தெரியும். உனக்கு நான் இருக்கிறேன். அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு. வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு..”ன்னு பதிவிட்டுள்ளார்.

நடிகை சங்கீதாவின் இந்த சோகப் பதிவும், அதற்கு அவரது கணவரின் பதிலும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :