அப்பாவின் முகமே அறியாத குழந்தை... ஜே.கே.ரித்தீஷ் மரணத்தில் நெஞ்சை பிசையும் சோகம்...! Description: அப்பாவின் முகமே அறியாத குழந்தை... ஜே.கே.ரித்தீஷ் மரணத்தில் நெஞ்சை பிசையும் சோகம்...!

அப்பாவின் முகமே அறியாத குழந்தை... ஜே.கே.ரித்தீஷ் மரணத்தில் நெஞ்சை பிசையும் சோகம்...!


அப்பாவின் முகமே அறியாத குழந்தை...    ஜே.கே.ரித்தீஷ் மரணத்தில் நெஞ்சை பிசையும் சோகம்...!

நடிகர், அரசியல்வாதி, நல்ல மனிதர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் ஜே.கே.ரித்தீஷ். அண்மையில் நடந்த இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுவும் விருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் அவர் மரணித்த சோகம் இன்னும் கூட இராமநாதபுரம் சேதுபதி நகர் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

இப்படியான சூழலில் தான் ஜே.கே.ரித்தீஷின் மூன்றாவது மகள், தன் அப்பாவின் முகம் கூட அறியும் வயது வரும் முன்னரே ரித்தீஷ் மறைந்த செய்தி வந்துள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் மருத்துவராக உள்ளார். இவர் தான் ரித்திஷீன் குடும்பத்துக்கு குடும்ப மருத்துவர். இவர் ரித்தீஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘’எந்த பெண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு, கணவரையும் இழந்திருக்கும் அவளே சின்னப் பொண்ணு தான். அதில் மூன்றாவது குழந்தை கைக்குழந்தை என்பதால் அவளது அப்பாவின் முகமே தெரியாது. நான் கலைஞரை பார்க்க மருத்துவமனைக்கு போயிருந்தேன். அப்போது அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போட லோகேஸ்வரி கூட்டி வந்திருந்தாள்.

அப்போது நான் ஆசீர்வாதம் செய்துவிட்டு, குழந்தை கையில் பணம் கொடுத்தேன். ஆனால் அவளோ ஆசீர்வாதம் மடும் போதும். பணம் வேண்டாம் என மறுத்துவிட்டாள். இப்படி பாசமான பெண் தன்கணவனை இழந்து நிற்கிறாள்.”என வேதனை பொங்க தெரிவித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :