கேரளத்தில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்க… தங்கபாலுவே மொழிபெயர்ப்பை பார்த்து சிரிச்சுருப்பாரு…! Description: கேரளத்தில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்க… தங்கபாலுவே மொழிபெயர்ப்பை பார்த்து சிரிச்சுருப்பாரு…!

கேரளத்தில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்க… தங்கபாலுவே மொழிபெயர்ப்பை பார்த்து சிரிச்சுருப்பாரு…!


கேரளத்தில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்க… தங்கபாலுவே மொழிபெயர்ப்பை பார்த்து சிரிச்சுருப்பாரு…!

ராகுல்காந்திக்கும் மொழிபெயர்ப்புக்கும் என்ன தான் பிரச்னையோ? ஒவ்வொரு ஊரிலும் அவரது மொழிபெயர்ப்பில் ஏகப்பட்ட சொதப்பல்கள் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் ராகுல் காந்தியின் பேச்சை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மொழிபெயர்க்க, அதில் அவர் சொதப்போ, சொதப்பு என சொதப்ப அதை வைத்து மீம்ஸ்கள் பறந்தது. அதேபோல் ஒரு சம்பவம் இப்போது கேரளத்திலும் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்தார் ராகுல் காந்தி. அப்போது அவரது பேச்சை முன்னாள் ராஜ்யசபா துணைத் தலைவர் கொரியன் மொழிபெயர்ப்பு செய்தார்.

. அப்போது ராகுல் பேசப் பேச அவருக்கு அது காதில் விழவில்லை. ராகுலை ஏக்கத்தோடு பார்க்க, ராகுலே அவரது காதின் அருகே போய் மீண்டும் அதைச் சொன்னார். அதை மொழிபெயர்த்தவர் மீண்டும் ராகுல் தொடர்ச்சியாய் பேச, மறுபடியும் திணறினார்.

ஒருகட்டத்தில் மொழிபெயர்ப்பு செய்த கொரியன் மைக்கையே ஒதுக்கி வைத்து விட்டு, ராகுலின் மைக் மேடையில் கையை வைத்துக் கொண்டு மைக் இல்லாமல் பேசத் துவங்கினார். அப்போது ராகுலே அவரது மைக்கை, வாய்க்கு நேராக சரி செய்தார். இப்படி மொழிபெயர்ப்பில் தங்கபாலுவையே மிஞ்சி சொதப்பிய, கொரியனுக்கு 78 வயது ஆகிறது. அதனால் அவர்து வயதுக்கு ஏற்ற காது கேட்கும் திறன் குறைந்ததால் நடந்த்ச் நிகழ்வு இது. ஆனாலும் தங்கபாலுவைப் போல், இது கேரளத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே வீடீயோ பாருங்களேன். குலுங்கி, குலுங்கி சிரிக்கலாம்.


நண்பர்களுடன் பகிர :