நாம் வீட்டில் இருந்து சாப்பிட இவர்கள் கடையில் நிற்கிறார்கள்! ஒரு க்யூவும்..ஜொமாடோ நிறுவன சுவாரஸ்யங்களும்...! Description: நாம் வீட்டில் இருந்து சாப்பிட இவர்கள் கடையில் நிற்கிறார்கள்! ஒரு க்யூவும்..ஜொமாடோ நிறுவன சுவாரஸ்யங்களும்...!

நாம் வீட்டில் இருந்து சாப்பிட இவர்கள் கடையில் நிற்கிறார்கள்! ஒரு க்யூவும்..ஜொமாடோ நிறுவன சுவாரஸ்யங்களும்...!


நாம் வீட்டில் இருந்து சாப்பிட இவர்கள் கடையில் நிற்கிறார்கள்!  ஒரு க்யூவும்..ஜொமாடோ நிறுவன சுவாரஸ்யங்களும்...!

ஜொமாடோ நிறுவனம் ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. சீருடையோடு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் அதன் பணியாளர்கள். இது குறித்த சுவாரஸ்ய செய்தியை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

உணவகத்துக்கு போய் சாப்பிட நினைப்பவர்கள் நல்ல உணவகத்தை தேர்ந்தெடுத்து போவோம். ஊரிலேயே பேமஸான ஒரு ஹோட்டலுக்கு போகும் போது, அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். உடனே காத்திருந்து சாப்பிடுவோம். ஆனால் இப்போதெல்லாம் ஜொமாடோ நிறுவனத்தினர் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்கின்றனர். இப்படி நாம் வீட்டில் இருந்து சொகுசாக சாப்பிட அவர்கள் க்யூவில் ஹோட்டலில் நிற்கும் படம் தான் அது.

ஹைதரபாத்தில் உள்ள பவர்ச்சி ஹோட்டல் பிரியாணி செம பேமஸ். இங்கு தான் ஜொமாடோ பணியாளர்கள் காத்து இருக்கும் படம் வெளியாகி உள்ளது. இங்கு இருந்து மட்டும் தினசரி 2000 ஆர்டர்கள் ஜொமாடோ வழியாக கஸ்டமர்களின் இல்லங்களுக்குப் போகிறது.

இந்த ஜொமாடோ ஆன்லைன் டெலிவரி, உலக அளவில் 10 ஆயிரம் நகரங்களில் உள்ளது. 14 லட்சம் உணவகங்களுடன் பிஸ்னஸ் டை அப் வைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் உணவகங்கள் உள்ளது.

இந்தியாவில் 213 நகரங்களில் கோலோச்சும் ஜொமாடோ முதலில் 15 நகரங்களில் இருந்து, இந்த இடத்துக்கு வந்துள்ளது. சாலை வழியே மட்டுமல்லாது, குவஹாத்தியில் ஒரு நகருக்கு பிரம்மபுத்திரா நதியின் ஊடே படகில் போய் ஹக்கா நூடுல்சை டெலிவரி செய்துள்ளது. இதற்கு ஒன்றரை மணிநேரம் ஆனதாக அந்த நிறுவனமே அறிக்கை விட்டுள்ளது. கோலாப்பூரில் ஆன்லைன் டெலிவரி சிஸ்டத்தையே இந்நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது.

பஞ்சாபில் உள்ள அபோகர் கிராமம், ஆன்லைன் டெலிவரியை அறிமுகப்படுத்திய அன்றே ஆயிரம் டெலிவரியை அள்ளிக் கொடுத்தது. இப்போதும் அந்த கிராமத்தில் தினமும் 2000 ஆர்டர்கள் இருக்கிறதாம். லக்னோவிலோ ஒரு தனி நபர் 16,800 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பும் பெற்று இருக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :