கருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்... தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ Description: கருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்... தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ

கருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்... தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ


கருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்...  தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ

பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகள் விடுமுறை காலங்களில் அமளிதுமளிப்படும். அதிலும் இரட்டை குழந்தைகள் இருக்கும் வீடுகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

இரு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அம்மா...இவன் அடிச்சுட்டான். அவன் கிள்ளிட்டான் என புகார்களும் ஏராளம் வரும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் அம்மாவின் கருவிலேயே சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவை சேர்ந்த தாவோ என்பவரின் மனைவி கடந்த ஆண்டு கருவுற்று இருந்தார். அப்போது அவரது கருவின் வளர்ச்சி குறித்து சோதிக்க ஸ்கேன் எடுத்துள்ளார். அப்போது வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகள் அங்கு இருந்தபடியே ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருந்ததை டாக்டர்கள் ஸ்கேனில் பார்த்தனர். உடனே அதன் சுவாரஸ்யம் கருதி அது வீடீயோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த இரட்டை பெண் குழந்தைகள் சண்டையிடும் வீடீயோ இதுரை 25 லட்சம் லைக்ஸ், 80 ஆயிரம் கமெண்ட்களை பெற்றுள்ளது. இந்த குழந்தைகள் சில தினங்களுக்கு முன்பு பிறக்க, அவர்களின் தாய் விரும்பி சாப்பிடும் பழங்களான செர்ரி, ஸ்டிராபெரியின் பெயர்களே அவர்களுக்கு வைக்கப்பட்டது. இந்த வீடீயோவும் இப்போதும் இணையத்தில் வைரலாகி வருவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தாவோ.


நண்பர்களுடன் பகிர :