மாடர்ன் உடைக்குத் தாவிய பாடகி ராஜலெட்சுமி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..! Description: மாடர்ன் உடைக்குத் தாவிய பாடகி ராஜலெட்சுமி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..!

மாடர்ன் உடைக்குத் தாவிய பாடகி ராஜலெட்சுமி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..!


மாடர்ன் உடைக்குத் தாவிய பாடகி ராஜலெட்சுமி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..!

குடும்ப குத்துவிளக்காக சீரியலில், டிவி நிகழ்ச்சிகளில் வருபவர்கள் மாடர்ன் உடையில் வந்தாலே நம் நாட்டில் கவனிக்கப்பட்டு விடுவார்கள். காரணம் மக்கள் அவர்களின் ஹோம்லி லுக்கையே அடையாளமாக பார்க்கின்றனர். பிக்பாஸ் ஜூலி மாடர்ன் உடையில் பார்த்த போதே அது குறித்து பேசுபொருளாக இருந்தது. இப்போது இந்த பட்டியலில் ராஜலெட்சுமி சேர்ந்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் ;பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆன ஜோடி தான் ராஜலெட்சுமி_செந்தில்.

அதிலும் இந்த ஜோடியின் ‘’ஏய் சின்ன மச்சான் சொல்லு பிள்ள’’ பாடல் கேட்காத செவிகளே இல்லை என சொல்லும் அளவுக்கு பேமஸ். கடைசியில் இப்பாடல் சார்லி சாப்லின் 2 படத்தில் இடம் பெற்று. இதற்கு பிரபுதேவாவே ஆட்டம் போட்டார்.

இந்நிலையில் அண்மையில் இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்வில் கலந்து கொண்டனர்,. அதில் இந்த ஜோடி மாடர்ன்ஸ் டிரஸ்ஸில் வந்திருந்தது இணையத்தில் வைரலானது. அதன் பின்னர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலெட்சுமி மாடல் உடையில் வந்தார்.

அடடே, ‘சின்ன புள்ள...சொல்லு மச்சான்”ன்னு கிராமத்து குரலோடும், உடையோடும் கோடான கோடி தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த நம்ம ராஜலெட்சுமியா இது? என கமெண்ட் செய்யத் துவங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்!


நண்பர்களுடன் பகிர :