வெறும் மூன்று ரூபாய்க்காக போட்ட வழக்கு... பாட்டா நிறுவனத்தையே அதிரவைத்த சண்டிகர் வாலிபர்..! Description: வெறும் மூன்று ரூபாய்க்காக போட்ட வழக்கு... பாட்டா நிறுவனத்தையே அதிரவைத்த சண்டிகர் வாலிபர்..!

வெறும் மூன்று ரூபாய்க்காக போட்ட வழக்கு... பாட்டா நிறுவனத்தையே அதிரவைத்த சண்டிகர் வாலிபர்..!


வெறும்  மூன்று ரூபாய்க்காக போட்ட வழக்கு... பாட்டா நிறுவனத்தையே அதிரவைத்த சண்டிகர் வாலிபர்..!

சட்டம் நமக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நுகர்வோர் உரிமைகள். ஆனால் அதை சரியாக பயன்படுத்துவோரை விரல் விட்டு எண்ணி விடலாம். சண்டிகரில் வாலிபர் ஒருவர் மூன்று ரூபாய்க்காக நீதிமன்றப் படியேறி பாட்டா நிறுவனத்தையே அதிர வைத்துள்ளார்.

முன்பெல்லாம் பெரிய வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்துக் கொடுப்பார்கள். ஆனால் இதற்கும் ஒரு குறிப்பிட்டத் தொகையை வசூல் செய்து விடுவார்கள்.

பிளாஸ்டிக் பைகள் தடை வந்த பின்பு பேப்பர் பை, துணிப்பை விநியோகிக்கப்படுகிறது. இதற்கு பாட்டா நிறுவனம் வசூலித்த கட்டணம் தான் நீதிமன்ற படியேற வைத்துள்ளது.

சண்டிகரை சேர்ந்த தினேஷ் பிரசாத் என்பவர், பிப்ரவரி மாதம் 5ம் தேதி, பாட்டா ஷோருமுக்கு ஷூ வாங்கப் போனார். 399 ரூபாய் என விலை போட்டிருந்த ஷூவை வாங்கி விட்டு, பில் கவுண்டருக்குப் போனார். ஆனால் அவருக்கு கொடுத்த ரசீதில் 402 ரூபாய் என போட்டிருந்தது. ரசீதை வாங்கிப் பார்க்கையில் ஷூவை வைத்துக் கொடுத்த பேப்பர் பைக்கு 3 ரூபாய் விலை போட்டிருந்தது. அந்த பேப்பர் பையில் பாட்டா ஷூவின் விளம்பரம் இருந்தது. அவர்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்வதை நான் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என வாதிட்டார்.

இதை மையமாக வைத்து நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘இலவசமாக பை வழங்குவதுதான் முறை. தினேஷிடம் அவரிடம் வாங்கிய மூன்று ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். அவரது வழக்குச் செலவுத் தொகையாக 1000 ரூபாய், மன உலைச்சலுக்கு 3000 கொடுக்கவும், மாநில நுகர்வோர் மறுவாழ்வு சட்ட உதவிக் கணக்கில் 5000 அபராதமாகச் செலுத்த வேண்டும். “என உத்தரவிட்டது.

ஆக, ஒரு பேப்பர் பையால் அசிங்கப்பட்டு நிற்கிறது பாட்டா நிறுவனம்!


நண்பர்களுடன் பகிர :