சாதி மாறி கல்யாணம்: விநோத தண்டனை கொடுத்த கிராமம்...! Description: சாதி மாறி கல்யாணம்: விநோத தண்டனை கொடுத்த கிராமம்...!

சாதி மாறி கல்யாணம்: விநோத தண்டனை கொடுத்த கிராமம்...!


சாதி மாறி கல்யாணம்: விநோத தண்டனை கொடுத்த கிராமம்...!

காதல் என்பது இரு உள்ளங்கள் இணையும் திருவிழா. அதற்கு சாதி, மதங்கள் எல்லாம் எல்லைகள் கிடையாது. இப்படியான சூழலில் சாதி மாறி திருமணம் செய்த பெண் ஒருவருக்கு கிராம மக்கள் கொடுத்த வினோதமான தண்டனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள தேவிகார் பகுதியை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்தார்.

ஒருகட்டத்தில் இவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். இதுகுறித்து பெண்ணின் சாதியை சேர்ந்த உறவுகளுக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தன் கணவரை தோளில் சுமந்து கொண்டு நீண்ட தூரம் செல்லும்மாறு தண்டனை கொடுத்தனர்.

முதலில் அதற்கு அந்த பெண் மறுத்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேச வேறு வழியின்றி அவர் அதை செய்ய, அதை ரசிக்கும் வகையில் அந்த கிராமத்து ஆண்கள் அந்த பெண்ணின் பின்னால் வந்தனர். நடையின் வேகத்தை மூச்சு இரைப்பின் போது நிறுத்திய போதும், அவர்களின் மிரட்டலுக்கு ஆளானார். இதை அதே ஊரை சேர்ந்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவேற்ற உடனே நடவடிக்கை எடுத்த போலீஸார் இருவரைக் கைதும் செய்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :