மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..! Description: மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..!

மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..!


மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..!

நடிகர் சூர்யா மற்றும் கே வி ஆனந்த் கூட்டணியில் உவருவாகும் படம்தான் காப்பான், இந்த படத்தின் டீசர் நேற்று வெளிவந்து இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கேரள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டீசரில் அனல்தெறிக்கும் வசங்களை சூர்யா பேசியுள்ளார், அவர் பேசும் வசங்கள் "போராடுறதே தப்புனா, போராடுற சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்", "தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?" ஆகியவை ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் காட்சிகளை பொறுத்தவரை மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார்.

டீசரின் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :