வாட்ச் மேன் படத்தைப் போல நிஜத்திலும் ஒரு நாய்... முப்பது பேரின் உயிரை காப்பாற்றி செத்துப் போன பரிதாபம்...! Description: வாட்ச் மேன் படத்தைப் போல நிஜத்திலும் ஒரு நாய்... முப்பது பேரின் உயிரை காப்பாற்றி செத்துப் போன பரிதாபம்...!

வாட்ச் மேன் படத்தைப் போல நிஜத்திலும் ஒரு நாய்... முப்பது பேரின் உயிரை காப்பாற்றி செத்துப் போன பரிதாபம்...!


வாட்ச் மேன் படத்தைப் போல நிஜத்திலும் ஒரு நாய்...    முப்பது பேரின் உயிரை காப்பாற்றி செத்துப் போன பரிதாபம்...!

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைபடமான வாட்ச் மேனில் ஒரு நாய் தன் உரிமையாளரைக் காக்க போராடும். அந்த போராட்டத்தின் இறுதியில் தன் உயிரையே கொடுத்து ஓனரைக் காப்பாத்தும். அதே போல் 30 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு ஒரு நாய் உயிரை விட்ட சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பண்டா நகரில் குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.

அதன் மேல்தளத்தில் மக்களின் குடியிருப்புகள் உள்ளது. நேற்று அதிகாலை மின்கசிவு ஏற்[பட்டு அந்த தொழிற்கூடம் தீப்பிடித்தது. அப்போது அதிகாலை நேரம் என்பதால் குடியிருப்புவாசிகள் அசந்து தூங்கி கொண்டிருந்தார்கள். தீவிபத்தைப் பார்த்த நாய் குரைக்கத் துவங்கியது.

குடியிருப்பு வாசிகள் வளர்க்கும் அந்த நாய், தொழிற்சாலையின் வாயில் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது. தீ பரவலாக எரிய, அதைப் பார்த்த நாய் பலமாக குரைத்தது. நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வெளியே வந்துப்பார்த்த குடியிருப்புவாசி ஒருவர் சூழலை புரிந்து கொண்டு, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொன்னதோடு, பக்கத்து வீட்டினரையும் கதவைத் தட்டி மாற்று இடத்துக்கு போகச் சொன்னார். இப்படி மொத்தம் 30 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடைசியில் தங்கள் உயிரையே காப்பாற்றிய அந்த நாயை காப்பாற்ற குடியிருப்புவாசிகள் செல்ல, அதற்குள் அந்த தொழில்கூடத்தில் இருந்த சிலிண்டர் ஒன்றில் தீபரவி வெடித்தது. இதில் கட்டிடத்தின் சில பகுதி இடிந்து விழுந்தது. இதில் தொழில்கூடத்தின் வாயிலில் கட்டப்பட்டு இருந்த நாயும் சிக்கி உயிர் இழந்தது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நண்பர்களுடன் பகிர :