விருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மரணம்... ஜே.கே.ரித்தீஷை நினைத்து, நினைத்து கண்ணீர் சிந்திய அமைச்சர்..! Description: விருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மரணம்... ஜே.கே.ரித்தீஷை நினைத்து, நினைத்து கண்ணீர் சிந்திய அமைச்சர்..!

விருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மரணம்... ஜே.கே.ரித்தீஷை நினைத்து, நினைத்து கண்ணீர் சிந்திய அமைச்சர்..!


விருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மரணம்...   ஜே.கே.ரித்தீஷை நினைத்து, நினைத்து கண்ணீர் சிந்திய அமைச்சர்..!

திரைத்துறை, அரசியல் என இரு சக்கரத்திலும் பயணித்த ஜே.கே.ரித்தீஷின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், ரித்தீஷ் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தியவர்.

இந்நிலையில் அவர் நேற்று திடீரென மாரடைப்பில் இறந்து போனார். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, விருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் நடிகர் ரித்தீஷ் உயிர் இழந்தது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. என உருகியுள்ளார்.

இப்போது அதிமுகவில் இருக்கும் ரித்தீஷ்,ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரும் சேர்ந்து மதிய உணவு நேரத்தின் போது சேர்ந்து விருந்து சாப்பிட்டனர். அந்த விருந்தே, ஜே.கே.ரித்தீஷின் ராஜாசேதுபதி நகரில் உள்ள வீட்டில் தான் நடந்தது. அந்த விருந்து முடிந்ததும், அமைச்சர் விஜயபாஸ்கரை மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜே.கே.ரித்தீஷ்.

மதுரையை நோக்கி போய்க் கொண்டிருந்த விஜயபாஸ்கருக்கு ரித்தீஸின் இறப்பு குறித்த தகவல் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த விஜயபாஸ்கர் காரை ஒரு ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். உடனே ராமநாதபுரம் போனவர் ரித்தீஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தன்னோடு சேர்ந்து சாப்பிட்ட ரித்தீஷின் நிலையை நினைத்து இன்னும் கூட சோகத்திலேயே உறைந்து ;போய் இருக்கிறார் விஜயபாஸ்கர்!


நண்பர்களுடன் பகிர :