ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள்! உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...! Description: ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள்! உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...!

ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள்! உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...!


ஒரே விமானத்தில் பைலட் ஆன அம்மா...மகள்!    உயரப் பறக்கும் சாதனை பெண்களின் கதை...!

பெண்கள் இன்று சகலதுறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஆண்களுக்கு பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் சாதனை சிகரத்தில் சிறகு விரித்து பறக்கின்றனர். அதில் ஒரு அங்கமாக ஒரே விமானத்தில் அம்மா, மகள் என இருவருமே விமானியாக இருக்கும் சம்பவம் உலக அளவில் டிரெண்டிங்காகி வருகிறது.





லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து, அட்லாண்டாவுக்கு டெல்டா விமான சேவையின் விமானத்தில் ஜான்.ஆர்.வாட்ரெட் என்பவர் பயணம் செய்திருக்கிறார்.





அப்போது அந்த விமானத்தில் பைலட்கள் இருவருமே பெண் என்றும், இருவரும் அம்மா_மகள் என்றும் தெரியவர அவர்கள் விமானி அறையில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து inspiration for young women என்னும் தலைப்பில் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு இருந்தார்.





அது இணையத்தில் செம வைரல் ஆனது. இந்த ஜான்.ஆர்.வாட்ரெட், எம்பரி ரிட்டில் என்ற வான்வெளி பொறியியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார். இவர் பயணம் செய்த அந்த விமானத்தில் கேப்டனாக வெண்டி ரெக்ஸனும், முதல் அலுவலராக அவரது மகள் கெல்லி ரெக்ஸனும் இருந்தனர். கெல்லியின் சகோதிரியும் கூட இன்னொரு விமானத்தில் பைலட்டாகவே உள்ளார்.

இந்த சாதனை அம்மா_மகள்களை நாமும் பாராட்டலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :