வறுமையிலும் நேர்மை...ஒரு கிரேட் அக்கா, தம்பியின் கதை! மாவட்ட எஸ்.பியே அழைத்து பாராட்டினார்..! Description: வறுமையிலும் நேர்மை...ஒரு கிரேட் அக்கா, தம்பியின் கதை! மாவட்ட எஸ்.பியே அழைத்து பாராட்டினார்..!

வறுமையிலும் நேர்மை...ஒரு கிரேட் அக்கா, தம்பியின் கதை! மாவட்ட எஸ்.பியே அழைத்து பாராட்டினார்..!


வறுமையிலும் நேர்மை...ஒரு கிரேட் அக்கா, தம்பியின் கதை!  மாவட்ட எஸ்.பியே அழைத்து பாராட்டினார்..!

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் பணத்துக்கு ஆசைப்படாமல் ஒரு அக்கா, தம்பி நேர்மையாய் செயல்பட்ட விதம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பக்கத்தில் உள்ள நத்தகாளியைச் சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சரோஜா. இவர்கள் குடும்ப பொருளாதாரச் சூழலின் காரணமாக குழந்தைகளை பெரிய, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாமல், ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். இவர்களது மூத்த மகள் ஜோதிகா 10ம் வகுப்பும், இளைய மகன் சதீஷ்5ம் வகுப்பும் படிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் பள்ளிக்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது சாலையில் ஒரு பவுன் தங்கச் சங்கிலி ஒன்று கிடந்தது. அக்காவும், தம்பியும் இதைப் பார்த்தனர்.

ஆனால் அந்த ஏழ்மை நிலையிலும் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. நேரே, பள்ளியின் தலைமையாசிரியையுடம் கொண்டு கொடுத்தனர்.

இதனை பள்ளியின் தலைமையாசிரியர் செல்வகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார். இதனை பார்த்துவிட்டு செயினை தொலைத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் வந்து பெற்றுக் கொண்டார். இரு குழந்தைகளின் நேர்மையை கேள்விப்பட்ட விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், இருவரையும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி கொளரவித்து, ஊக்கப்பரிசும் வழங்கினார்.


நண்பர்களுடன் பகிர :