ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்பிய கூலித்தொழிலாளி.. ஆச்சர்யத்தில் மூழ்கி அதிசயத்துப் போன நிருபர்...! Description: ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்பிய கூலித்தொழிலாளி.. ஆச்சர்யத்தில் மூழ்கி அதிசயத்துப் போன நிருபர்...!

ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்பிய கூலித்தொழிலாளி.. ஆச்சர்யத்தில் மூழ்கி அதிசயத்துப் போன நிருபர்...!


ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்பிய கூலித்தொழிலாளி..   ஆச்சர்யத்தில் மூழ்கி அதிசயத்துப் போன நிருபர்...!

ஆங்கிலம் என்பது அறிவல்ல...அது ஒரு மொழி. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிவு இல்லதவர்கள் என்று அர்த்தம் இல்லை என பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். இங்கே அதை மெய்பிக்கும் வகையில் ஆங்கில மொழியில் புலமையுடன் ஒரு கூலித் தொழிலாளி பட்டையைக் கிளப்ப, அவரிடம் பேட்டி எடுக்கப் போன நிருபர் அதிசயத்து பார்க்கும் சம்பவம் நிகழ்த்துள்ளது.

பிரபல இந்தி தொலைக்காட்சி ஒன்று நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அப்போது தான் கூலித்தொழிலாளி ஒருவர் ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளார். அடுத்து யார் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது? தற்போதுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர் ஏழைக் கூலித் தொழிலாளி ஒருவரைப் பார்த்து கேட்ட கேள்விக்குத்தான், இப்படி ஆங்கிலத்தில் பதில் சொல்லி அசத்தியுள்ளார்.

அப்போது அவர் பிரதமர் மோடி ஆட்சியையும், இந்திரா காந்தி இருந்த போது இருந்த ஆட்சியையும் ஒப்பிட்டு பேசினார். மேலும் அப்போதைய வேலைவாய்ப்பை பற்றியும் பேசினார். ஆனால் அவரது ஆங்கிலப்புலமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த செய்தியாளரோ இந்தியிலேயே பேசித் தடுமாறுகிறார்.

கூலித்தொழிலாளான இவர் பகல்பூர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் படித்தவராம். செய்தியாளர் கடைசி வரை இந்தியிலேயே பேச, அந்த ஏழைக் கூலித் தொழிலாளியோ இந்தி, ஆங்கிலம் என இருமொழியிலும் பேசி பட்டையைக் கிளப்பியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :