கண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..! Description: கண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..!

கண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..!


 கண்டித்த அம்மாவை சமாளிக்க....   கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய  குழந்தை..!

குழல் இனிது, யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதாவர் என்பது தமிழ் இலக்கியம் காட்டும் பாதை. செல்லக் குழந்தைகளின் பேச்சுக்கு முன்பு எதையுமே ஈடு சொல்ல முடியாது. அப்படி கண்டித்த தன் தாயை, விஸ்வாசம் பாடலை பாடி குழந்தை மழுப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது.

அப்பா_மகள் பாசத்தை மையமாக வைத்து தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ அண்மையில் வெளியானது. இந்த படம் பட்டி, தொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்டது. பல செல்லக் குழந்தைகளின் விருப்பப்பாடலாகவும் ‘கண்ணாண கண்ணே’ பாடல் இடம் பெற்றது.

இப்படித்தான் இந்த குழந்தைக்கும் அந்த பாடல் மிகவும் பிடித்துப்போனது. வீடு நிரம்ப தன் பொம்மைகளைக் கொட்டிப்ப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை. அப்போது அதன் அம்மா வந்து, சிதறி விட்டிருக்கும் பொம்மையையெல்லாம் தூக்கி டப்பாவுக்குள் வை என கண்டிக்கிறார். முதலில் மாட்டேன் எனச் சொல்லும் குழந்தையை, அம்மா கடுமையாகத் திட்ட, உடனே விஸ்வாசம் படத்தில் வரும் , ‘கண்ணாண கண்ணே’ பாடலை அழுதுகொண்டே சப்தமாக பாடி, தன் அம்மாவை சமாளிக்க முயற்சி எடுக்கிறது அந்த குழந்தை.

அழுதுகொண்டே, ‘கண்ணான கண்ணே’ பாடலைக் குழந்தை பாடும் வீடீயோ இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :