சாதனை புரிந்த மேட்சிலேயே அபராதமும் வசூல்! தல தோனி ரசிகர்கள் கொண்டாடவும் இதில் விசயம் உண்டு..! Description: சாதனை புரிந்த மேட்சிலேயே அபராதமும் வசூல்! தல தோனி ரசிகர்கள் கொண்டாடவும் இதில் விசயம் உண்டு..!

சாதனை புரிந்த மேட்சிலேயே அபராதமும் வசூல்! தல தோனி ரசிகர்கள் கொண்டாடவும் இதில் விசயம் உண்டு..!


சாதனை புரிந்த மேட்சிலேயே அபராதமும் வசூல்! தல தோனி ரசிகர்கள் கொண்டாடவும் இதில் விசயம் உண்டு..!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெரும் சாதனையை தோனி புரிந்தார். அதே நேரம் நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரது சம்பளத்தில் பாதித்தொகை பிடித்தமும் செய்யப்பட்டது.

ஜெய்பூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்தது. இதில் ஷேன் வாச்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விக்கெட்கள் சரிய, சென்னை அணி 24 ரன்களிலேயே 4 விக்கெட்களை இழந்து பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து களம் இறங்கிய தோனி, ராயுடுவுடன் கைகோர்த்து நின்று ஆடினார். தோனி 58 ரன்னிலும், ராயுடு 57 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

கடைசி ஓவரில் வெற்றி இலக்குக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் ஒருபந்து, இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோபாலாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனை மைதானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தோனி, ஆட்ட கிரவுண்டுக்குள் போய் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக தோனிக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மேட்சில் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து சேண்ட்னெர் சென்னை அணியை ஜெயிக்க வைத்தார். தோனிக்கு அபராதம் விதித்த கதை ஒருபக்கம் இருக்க, தல தோனி ரசிகர்கள் ஸ்வீட் எடுத்து கொண்டாடவும் ஒரு விசயம் இருக்கு.

இந்த மேட்சில் கிடைத்த வெற்றியின் மூலம் 100 ஐ.பி.எல் போட்டிகளில் ஜெயித்த முதல் கேப்டன் என்னும் பெருமையையும், சிறப்பையும் பெற்றிருக்கிறார் தல தோனி!


நண்பர்களுடன் பகிர :