சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி! Description: சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி!

சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி!


  சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி!

தல தோனிக்கு எப்போதுமே சென்னை ரசிகர்கள் மீது தனி கிரேஸ். சென்னை ரசிகர்களுக்கு தோனி மீதான கிரேஸ்ம் அப்படித்தான். அந்தவகையில் சென்னை ரசிகர்களுக்கும், தனக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என தல தோனியே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மேட்சைப் பொறுத்தவரை தல தோனிக்கு மிகப்பெரிய ரசிகர் படை உண்டு. சென்னையைத்தாண்டி வெளியிலும் அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் அவர் பின்னால் செல்கிறது. சென்னைக்கு தோனியை பொறுத்தவரை கிரிக்கெட் உலகின் தல.

இதனாலேயே தனது இரண்டாவது வீடு சென்னை தான் என தோனியே பலமுறை கூறியுள்ளார். இந்த சூழலில் சென்னை_கொல்கத்தா போட்டிக்கு பின் பேசிய தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

சென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது? என்பது தான் அந்த கேள்வி. அதற்கு, ‘’எனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு ரொம்ப சிறப்பு வாய்ந்தது. அவர்கள் உண்மையாகவே என்னை மனதார ஏற்றுக் கொண்டுள்ளனர்.”என்று சொல்லியுள்ளார் நம் கிரிக்கெட் உலகின் தல!


நண்பர்களுடன் பகிர :