காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு! Description: காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு!

காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு!


காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு...    தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு!

காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை குஷ்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படி பிரச்சாரத்துக்குப் போன இடத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவரை குஷ்பு கன்னத்தில் அறையும் வீடீயோ வைரலாகி வருகிறது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை குஷ்புவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அவருக்கு தமிழ் ரசிகர்கள் சேர்த்து கோயிலே கட்டி உள்ளனர். குஷ்பு முதலில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இப்போது அங்கு செய்தித் தொடர்பாளராக உள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) ஆகியவை சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

இதில் மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரைரிஷ்வான் ஷர்ஷத்தை ஆதரித்து திறந்த பிரச்சார வேனில் நின்று பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு, பிரச்சாரத்தை முடித்து விட்டு தன் காரை நோக்கி சென்றார். அப்போது அவர் பின்னால் ஏராளமான காங்கிரஸார் ஓடினர். அதில் ஒருவர் குஷ்புவை தவறான முறையில் தட்டியுள்ளார்.

உடனே குஷ்பு அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார். உடனே போலீஸார் அந்த தொண்டரை தனியாக இழுத்து வந்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குஷ்பு கன்னத்தில் அறையும் வீடீயோ சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :