மனைவியோடு தரையில் படுத்து தூங்கிய தோனி... இன்ஸ்டாகிராமில் தோனி போட்ட படத்தின் பிண்ணனி இதுதான்! Description: மனைவியோடு தரையில் படுத்து தூங்கிய தோனி... இன்ஸ்டாகிராமில் தோனி போட்ட படத்தின் பிண்ணனி இதுதான்!

மனைவியோடு தரையில் படுத்து தூங்கிய தோனி... இன்ஸ்டாகிராமில் தோனி போட்ட படத்தின் பிண்ணனி இதுதான்!


மனைவியோடு தரையில் படுத்து தூங்கிய தோனி... இன்ஸ்டாகிராமில் தோனி போட்ட படத்தின் பிண்ணனி இதுதான்!

சிங்காரச் சென்னையில் ஜபிஎல் மேட்ச் விளையாட நம்ம தல தோனி வந்தது எல்லாருக்கும் தெரியும் தானே? மேட்லாம் முடிச்சுட்டு ஊருக்கு போக ஏர்போர்ட்க்கு வந்த, தல தோனி டயர்டா பீல் பண்ணிருக்காரு, உடனே ஏர்போர்ட்ல தரையிலேயே படுத்து தூங்கிருக்காரு. அவருக்கு பக்கத்திலெயே அவர் மனைவியும் படுத்திருந்தார். அதை தோனி இன்ஸ்டாகிராமில் போட்டுருக்காரு.

சென்னை சூப்பர் கிங்ஸ்_கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மேட்ச் முடிந்ததும் சென்னையில் இருந்து புறப்பட்ட வீரர்கள் சென்னை விமானநிலையத்தில் விமானத்துக்கு காத்திருந்த போது விளையாடிய அலுப்பினால் ஒரு குட்டித் தூக்கம் போட்டனர்.

இதில் தோனியும் குட்டித் தூக்கம் போட்டார். இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தல தோனி, ‘’ஐபிஎல் டைமிங்கிற்கு பழக்கப்பட்ட பின்னர், காலைநேர விமானம் என்றால் இதுதான் நடக்கும்” என பதிவு செய்திருந்தார்.

இந்த சீசனில் போட்டிகள் அனைத்துமே குறிப்பிட்ட காலநேரத்தை விட, அதிகநேரம் எடுத்து விளையாடுவதாக பொதுவெளியில் குற்றச்சாட்டு இருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரஹானே, மும்பை இந்தியன் வீரர் ரோஜித் சர்மாவும், டெல்லி அணியில் உதவிப் பயிற்சியாளர் முகமது கைப் ஆகியோரும் இதே கருத்தை சொல்லி இருந்தார்கள். பொதுபாகவே ஐ.பி.எல் போட்டிகளின் பலமே அதன் விரைவு தான். ஒவ்வொரு அணியும் மூன்று நாள்களில் இரண்டு போட்டிகளில் விளையாடுவார்கள். இதையெல்லாம் மையமான வைத்துத்தான் சூசகமாக பதிவைத் தட்டி விட்டாராம் தோனி!


நண்பர்களுடன் பகிர :