குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..! Description: குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..!

குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..!


குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..!

சைக்கிள், பைக், கார் என பலவித வாகனங்களிலும் பள்ளிக் கூடத்துக்கு வருபவர்களைப் பார்த்திருப்போம். ஆனால் ஒரு பெண் குதிரையில் பள்ளிக் கூடம் வந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படியொரு ஆச்சர்ய சம்பவம் கேரளத்தில் நடந்துள்ளது.

கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், மலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் இரு குதிரைகளையும் வளர்த்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வெழுதி வரும் இவர், தன்னுடைய கடைசி தேர்வன்று குதிரையில் போய் தேர்வு எழுதினார். குதிரையில் பரீட்சைக்குப் போன, கிருஷ்ணாவை சாலையோரம் வாகனத்தில் சென்ற ஒருவர் வீடீயோ எடுத்து தன் முகநூல் பக்கத்தில் போட, அது இப்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாணவி கிருஷ்ணா கூறும்போது, ‘’நான் வளர்க்கும் குதிரையில் கடைசி பரீச்சைக்குப் போனேன். பலரும் இதுநல்ல ஆலோசனை இல்லை என கருத்து சொன்னார்கள். ஆனால் நான் என் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தேன். நான் இதற்கு முன்பும் சில பள்ளி விழாக்களுக்கு குதிரையில் போயிருக்கேன்.”என்று கூலாக கூறுகிறார்.

மாணவி கிருஷ்ணாவின் தந்தை அங்குள்ள கோவில் ஒன்றில் குருக்களாக இருக்கிறார். இவரோ வீட்டில் இரு குதிரைகள் இருக்கின்றன. என் பொருளாதார சூழலில் அதை வளர்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என் மகள் மிகவும் தைரியசாலி எனக் கூறியுள்ளார். இந்த மாணவி பரீச்சைக்கு குதிரையில் போகும் வீடீயோவைப் பார்த்துவிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஜிந்திரா, ‘’இவர் மிகவும் திறமைசாலி’; என ட்விட் செய்துள்ளார்.

பெண்களை படிப்பு வாசமே அண்டவிடாத தலைமுறையை கடந்து, இன்று வீரமங்கையாக குதிரையில் வந்து பரீச்டை எழுதிச் சென்ற இந்த மங்கைக்கு ராயல் சல்யூட்!


நண்பர்களுடன் பகிர :