விவசாயம் படித்த இந்திய மாணவிக்கு ஒருகோடி சம்பளத்தில் வேலை..! Description: விவசாயம் படித்த இந்திய மாணவிக்கு ஒருகோடி சம்பளத்தில் வேலை..!

விவசாயம் படித்த இந்திய மாணவிக்கு ஒருகோடி சம்பளத்தில் வேலை..!


விவசாயம் படித்த இந்திய மாணவிக்கு ஒருகோடி சம்பளத்தில் வேலை..!

இப்பல்லாம் யாருங்க விவசாயம் பார்க்குறா? என்று வேளாண் தொழிலை தள்ளி வைத்து, தள்ளி வைத்து இன்றெல்லாம் விவசாயம் செய்ய மட்டுமல்ல, விவசாயப் படிப்பை படிக்கவும் கூட ஆள்கள் இல்லை எனும் சூழலுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படியான சூழலில் இந்தியாவை சேர்ந்த விவசாயம் படித்த மாணவி ஒருவருக்கு ஒருகோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்தவர் கவிதா ஃபாமன். இவர் லவ்லி பிரபஷனல் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.சி அக்ரிசல்சர் படித்துள்ளார். இந்த கல்லூரியிலும் இவர் தான் முதல் மதிப்பெண். இவரைத்தான் கனடாவில் உள்ள மான்சாண்டோ கனடா என்னும் விவசாய விதை, உரத் தயாரிப்பு நிறுவனம் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது.

பஞ்சாபை சேர்ந்த இந்த இளம்பெண்ணுக்கு ஒரு விவசாய நிறுவனம் கொடுத்த சேலரி ஆபர், பஞ்சாபில் பலரையும் விவசாய படிப்பை நோக்கி நகர்த்துகிறது.


நண்பர்களுடன் பகிர :