தமிழ்நாடு கேரளத்தின் குப்பைத் தொட்டியா? தனி ஒருவனாக மடக்கிய வாலிபர்.. வைரலாகும் வீடீயோ...! Description: தமிழ்நாடு கேரளத்தின் குப்பைத் தொட்டியா? தனி ஒருவனாக மடக்கிய வாலிபர்.. வைரலாகும் வீடீயோ...!

தமிழ்நாடு கேரளத்தின் குப்பைத் தொட்டியா? தனி ஒருவனாக மடக்கிய வாலிபர்.. வைரலாகும் வீடீயோ...!


தமிழ்நாடு கேரளத்தின் குப்பைத் தொட்டியா?    தனி ஒருவனாக மடக்கிய வாலிபர்.. வைரலாகும் வீடீயோ...!

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்துக்கு திருட்டுத்தனமாக டன் கணக்கில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதைத் தடுக்க ஆங்காங்கே பொதுமக்களே களத்தில் இறங்குவது பெரிய ஆறுதலாக உள்ளது.





அந்தவகையில் கேரளத்தில் இருந்து தமிழகம் நோக்கி குப்பைகளுடன் வந்த பெரிய கண்டெய்னர் லாரியை ஒரு நடுத்தரவயது வாலிபர் தடுத்து நிறுத்துகிறார். லாரியின் கிளீனர் அவரை சமாளிக்க முயல்கிறார். ஆனால் அந்த வாலிபர் அவரிடம் எங்க தமிழ்நாடு உங்களுக்கு என்ன டஸ்ட் பின்னா? நீ குப்பையை கொண்டு வந்து இங்க கொட்டுற? என மிரட்டு,ம் தொனியில் கேட்கிறார்.





இப்போது அந்த கிளீனர் உடனே கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுக்கிறார். ஆனால் அதற்கு மயங்காத அந்த வாலிபர், என்ன பைசாவை நீட்டுற? என சிங்கம்போல் கர்ஜிக்கிறார்.

மேலும் கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவை கொண்டு வந்து கொட்டுற, இதைப்பத்திக் கேட்டா பைசா தர்ற...பளார்ன்னு வைச்சுருவேன். அங்க இருந்து குப்பையை ஏன் இங்க கொண்டுவந்து தட்டுற? தமிழ்நாடு என்ன டஸ்ட் பின்னா? என மிரட்டுகிறார்.





உடனே அந்த லாரி கிளீனர் தெரியாமல் வந்துட்டேன் என்று சொல்ல,சோறு திங்க தெரியுதுல்ல? ப்ரஸ் வருது, போட்டோ எடுக்க...அவ்வளவும் கேரளா குப்பை தானே? யூடர்ன் பண்ணி கேரளாவில் போய் கொட்டிட்டு வா...”என போல்டாக சொல்ல அந்த வீடீயோ இப்போது சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :

S
Srinivasan 11மாதத்திற்கு முன்
Likethis all young men try to folllllllllllow this , our place is not big dustbin