தினமும் ராத்திரி இரண்டு கிராம்பு சாப்பிட்டு பாருங்க... உங்க வயிற்றுப் பொருமல் பிரச்னையை ஊதித்தள்ளுங்க..! Description: தினமும் ராத்திரி இரண்டு கிராம்பு சாப்பிட்டு பாருங்க... உங்க வயிற்றுப் பொருமல் பிரச்னையை ஊதித்தள்ளுங்க..!

தினமும் ராத்திரி இரண்டு கிராம்பு சாப்பிட்டு பாருங்க... உங்க வயிற்றுப் பொருமல் பிரச்னையை ஊதித்தள்ளுங்க..!


தினமும் ராத்திரி இரண்டு கிராம்பு  சாப்பிட்டு பாருங்க...  உங்க வயிற்றுப் பொருமல் பிரச்னையை ஊதித்தள்ளுங்க..!

நம் முன்னோர்கள் நமக்கு காட்டித்தந்த ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அப்பத்தான் கிராம்பிலும். கிராம்பு பல நோய்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

கிராம்பில் பல ஊட்டச்சத்துகளும், கனிமச்சத்துகளும் இருக்கிறது. இரண்டே கிராம் கிராம்பில் 21 கலோரிகள் இருக்கிறது. கூடவே ஒருகிராம் கார்போஹைட்ரேட், ஒருகிராம் நார்ச்சத்தும் இருக்கிறது. வயிற்றுப் பொருமல், அசிடிட்டி, வயிற்றுவலி போன்றவற்றை சில இயற்கை பொருள்களின் மூலம் குணப்படுத்தலாம். இதற்கு துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மோர், ஆப்பிள் சிடர் வினிகர், கிராம்பு ஆகியவை முக்கியப்பங்கு வகிக்கிறது.

வயிற்றுப் பொருமல் நோயை போக்குவதில் கிராம்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. வயிற்றுப் பொருமலை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு, தொண்டை மற்றும் இதயத்தில் ஏற்படும் எரிச்சல், அஜீரணம், வாயில் நீடித்த புளிப்பு சுவை, குமட்டல், ஓய்வின்மை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் கிராம்பை சாப்பிடும்போது, கிராம்பு நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது. உணவுடன் கிராம்பை சேர்க்கும்போது, அமிலத்தன்மையை தடுக்கும். கிராம்பு, எலக்காயை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வாயில் போட்டு மென்றால் அசிடிட்டியை தடுப்பதோடு, வாயுவையும் வெளியேற்றும். கிராம்புகள் உமிழ்நீர் உற்பத்தியை மேம்படுத்தும்.

மூன்றே மூன்று கிராம்புகளை வாயில் போட்டு மெல்வதால் வெளிவரும் ஜூஸ் அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கொடுக்கும். இதேபோல் நொறுக்கிய கிராம்புகளை, ஏலக்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும். கிராம்பை தினமும் சாப்பிட்டாலே வயிற்றுப் பொருமல் ஓடி விடும்.


நண்பர்களுடன் பகிர :