உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விவாகரத்து... இரண்டை லட்சம் கோடி ஜீவனாம்சம்ன்னா சும்மாவா? Description: உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விவாகரத்து... இரண்டை லட்சம் கோடி ஜீவனாம்சம்ன்னா சும்மாவா?

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விவாகரத்து... இரண்டை லட்சம் கோடி ஜீவனாம்சம்ன்னா சும்மாவா?


உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விவாகரத்து...   இரண்டை லட்சம் கோடி ஜீவனாம்சம்ன்னா சும்மாவா?

உலக அளவில் பலவித சாதனைகள் வைரலாகுவதும், வரலாற்றில் இடம் பிடிப்பதும் வழக்கமான விசயம் தான். அந்த வகையில் ஒரு விவாகரத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஒரு விவாகரத்தால் மட்டுமே உலகின் பணக்கார பெண்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ஒரு பெண்.

அமேசான் நிறுவனத்தின் அதிபர் சஜெப் பெசோஸ் தான் மனைவிக்கு விவாகரத்தின் போது இரண்டரை லட்சம் கோடியை தூக்கிக் கொடுத்திருக்கிறார். பொதுவாக விவாகரத்தின் போது, மனைவியின் தனிமையான வாழ்வியல் சூழலைக் கருத்தில் கொண்டு, கணவர்கள் ஜீவனாம்சம் வழங்குவது வழக்கம் தான். ஆனால் இவர் வழங்கிய தொகையைக் கேட்டு உலக நாடுகளே அதிர்ந்து போனது.

ஜெப் பெசோஸ் அமேசானை தொடங்கும் முன்பே, 1993ம் ஆண்டு மக்கின்சியை காதலித்து திருமணம் செய்தார். மக்கின்சி நாவலாசிரியை. இந்த தம்பதியினர் கடந்தஜனவரியில் விவாகரத்து பெற்றனர். அமெரிக்காவில் உள்ள பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவருடன் ஜெப் பெசோஸ் நெருங்கிப் பழகியதால் மெக்கன்சி இந்த முடிவை எடுத்தார். அமெரிக்க சட்டப்படி கணவனின் சொத்தில் 50 சதவிகிதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெறமுடியும். அந்த வகையில் அமேசான் ஓனருக்கு 10 லட்சம் கோடிக்கு சொத்து இருந்தது.

அதில் 5 லட்சம் கோடி சொத்துகள் விவாகரத்தின் போது மக்கின்சிக்கு போகும் என யூகிக்கப்பட்டது. ஆனால் மக்கின்சியே தனக்கு 25 சதவிகிதச் சொத்துகள் போதும் என கேட்டதால் அவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஜீவனாம்சமாக வழங்கப்பட்டது. இதன் பின்னரும் உலகின் முதல் பணக்காரராகவே தொடர்கிறார் ஜெப் பெசோஸ். அதே நேரம் இந்த விவாவகரத்தால் உலகின் மூன்றாவது பெரிய பணக்கார பெண்ணாக மாறியுள்ளார் மெக்கன்சி.

இதற்கு முன்னர் கடந்த 1999ம் ஆண்டு அலெக் என்பவர் அவரது மனைவி ஜோஸ்லினுக்கு 4 ஆயிரம் கோடி ஜீப்வனாம்சம் கொடுத்ததே அமெரிக்காவில் பெரிய தொகையாக பேசப்பட்டது. அதை அலேக்காக ஓவர்டேக் செய்துள்ளார் அமேசான் ஓனர்!


நண்பர்களுடன் பகிர :