தல அஜித் மீடியாக்களை சந்திக்காமல் இருப்பது ஏன்? நீயா? நானா கோபிநாத் சொன்ன ரகசியம்..! Description: தல அஜித் மீடியாக்களை சந்திக்காமல் இருப்பது ஏன்? நீயா? நானா கோபிநாத் சொன்ன ரகசியம்..!

தல அஜித் மீடியாக்களை சந்திக்காமல் இருப்பது ஏன்? நீயா? நானா கோபிநாத் சொன்ன ரகசியம்..!


தல அஜித் மீடியாக்களை சந்திக்காமல் இருப்பது ஏன்? நீயா? நானா கோபிநாத் சொன்ன ரகசியம்..!

தல அஜித்குமாருக்கு திரையுலகில் மட்டுமல்ல...வெளியிலும் மிகுந்த நல்ல பெயர் உண்டு. மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கிறார்.

அஜித்குமார் தான் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே தனது ரசிகர் மன்றங்களைக் களைத்தவர். நமக்குத் தொழில் நடிப்பு, ரசிகர்கள் தனக்காக தங்கள் பொன்னான நேரத்தையும், குடும்பத்தையும் மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார் அஜித். இதேபோல் அஜித்தை பார்க்க வேண்டுமென்றால் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். தன் படம் சார்ந்த நிகழ்வு துவங்கி, எந்த பொதுநிகழ்விலும் கூட தல அஜித் தலை காட்டுவதில்லை.

மீடியாக்கள் முன்பும் பேட்டி என வந்து அஜித் அமர்வதில்லை. ஏன் அஜித் இப்படி இருக்கிறார் என நீயா? நானா? புகழ் கோபிநாத் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், ‘’விஜய் டிவி வருவதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் ஆக்கரிங், பேட்டி எடுப்பது என நிறைய நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருந்தேன். அப்போ ஒரு தொலைக்காட்சியில் இருந்து, அஜித்தை பேட்டி எடுக்க கேட்டு இருந்தோம். தல அஜித்திடம் பேட்டி எடுப்பது அவ்வளவு ஈஸி இல்ல. ஆனாலும் நாங்க அவர்கிட்ட ஒன் டூ ஒன் பேட்டி கேட்டு இருந்தோம்.

அதுக்கு அவர் சம்மதிக்கல. ஆனால் நான் தல அஜித் சாரை தொடர்ந்து பேட்டிக்கு கம்பேல் பண்ணிட்டே இருந்தேன். ஒருகட்டத்தில் அவர் சம்மதிச்சுட்டாரு. சென்னை க்ரீன் பார்க்ல அஜித் சாரை பேட்டி எடுத்தோம். அப்போ நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தல அஜித்சார் ரொம்பவே நிதானமா பதில் சொன்னாரு. அவரு கஷ்டப்பட்டு பேட்டி கொடுக்குற மாதிரி எனக்கு ஒரு பீல் ஆச்சு.

நான் உடனே, எல்லா கேமராவையும் ஆப் பண்ணச் சொல்லிட்டு உங்க வாயில் இருந்து வார்த்தையை வாங்கிட்டு தான் இந்த இண்டர்வியூவை ஹிட் பண்ணணும்ன்னு இல்ல. மனசுக்கு என்ன தோணுதோ அதை பேசுங்கன்னு சொன்னேன். அதுக்கு அஜித்சார் பொதுவா நான் யாருக்குமே இண்டர்வியூ கொடுக்குறது இல்ல. ஏன்னு பார்த்தா, நான் ஆரம்பகாலத்துல, வந்த புதுசுல இண்டர்வியூ கொடுக்கும்போது எனக்கு சுத்தமா தமிழ் பேசவரல. அப்போ எல்லாரும் ஒரு தமிழ் நடிகருக்கு தமிழ் பேச வரலன்னு என்ன கலாய்ச்சாங்க.

அதுக்கு அப்புறம் சில இண்டர்வியூவுல கொஞ்சம் வார்த்தைகளை இங்கீலீசில் பேசினேன். அதுக்கும் என்னைய தமிழ் நடிகரா இருந்துட்டு இங்கிலீஷ் பேசி சீன் போடுறாருன்னு கலாச்சாங்க. தொடர்ந்து இன்னொரு இண்டர்வியூவுல நான் தமிழ் வார்த்தைகளை தப்பா யூஸ் பண்ணிட்டேன். உடனே அதுக்கும் கலாய்ச்சாங்க. நான் எதை செஞ்சாலும், பேசுனாலும் மாத்தி, மாத்தி விமர்சனம் செஞ்சாங்க. இதனாலேயே நான் மீடியாவை விட்டு ஒதுங்கி நிற்கிறேன்ன்னு சொன்னாரு”என கோபிநாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னதோடு தல அஜித்தை ரொம்ப நல்ல மனிதர் என புகழ்ந்தும் தள்ளியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :