கட்டியணைத்து...முத்தம் கொடுத்து... மனிதர் மேல் பாசம் வைத்து இந்த ஆடு செய்வதைப் பாருங்க...! Description: கட்டியணைத்து...முத்தம் கொடுத்து... மனிதர் மேல் பாசம் வைத்து இந்த ஆடு செய்வதைப் பாருங்க...!

கட்டியணைத்து...முத்தம் கொடுத்து... மனிதர் மேல் பாசம் வைத்து இந்த ஆடு செய்வதைப் பாருங்க...!


கட்டியணைத்து...முத்தம் கொடுத்து... மனிதர் மேல் பாசம் வைத்து இந்த ஆடு செய்வதைப் பாருங்க...!

கால்நடைகள் எப்போதுமே மனிதர்களை விட அதீதமாக அன்பை வெளிப்படுத்தக் கூடியவை. வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் இதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். அவர்கள் எங்காவது வாகனத்தில் வெளியில் கிளம்பி விட்டால் நாய் தெருமுனை வரையேனும் பின்னாலேயே ஓடிவரும்.





நாய் தான் என்றில்லை பூனையை வீட்டில் வளர்ப்பவர்களுக்குத் தெரியும். பூனை பாசம் வைத்தவர்கள் வந்து விட்டால் மெல்ல அவர்கள் மேல் தலையை வைத்து உரசும். விளையாடும். அதேபோல் தான் இங்கு ஆடு ஒன்று, ஒரு பெரியவரின் மீது பாசம் வைத்து செய்யும் செயல் வைரலாகி வருகிறது.





ஊரில் கொஞ்சம் ஓய்வெடுக்க ஒதுக்குப்புறமாக ஒதுங்கி உட்கார்ந்து இருக்கிறார் அந்த பெரியவர். அங்கு அவர் வளர்க்கும் ஆடு வந்துவிடுகிறது. உடனே அதை தனது கையால் தள்ளி விடுகிறார். ஆனால் ஆடு அங்கு இருந்து செல்ல மறுக்கிறது. உடனே அவரின் பின்பக்கமாக வந்து தோளில் ஏறி நின்று கொள்கிறது.





இப்போது இரு கால்களையும் அவரது நெஞ்சுப் பகுதியில் போட்டு பாசத்தோடு ஆட்டுகிறது. தொடர்ந்து அவரது கன்னத்தில் குழந்தை, தன் தந்தைக்கு முத்தமிடுவது போல் முத்தம் இடுகிறது.

கீழே வீடீயோவைப் பாருங்களேன். இந்த ஆட்டின் பாசம் தெரியும்.


நண்பர்களுடன் பகிர :