கணவரிடம் கோபத்தை இப்படியாம்மா காட்டுவது? சாப்பிட உட்கார்ந்த கணவருக்கு நடந்ததை பாருங்க...! Description: கணவரிடம் கோபத்தை இப்படியாம்மா காட்டுவது? சாப்பிட உட்கார்ந்த கணவருக்கு நடந்ததை பாருங்க...!

கணவரிடம் கோபத்தை இப்படியாம்மா காட்டுவது? சாப்பிட உட்கார்ந்த கணவருக்கு நடந்ததை பாருங்க...!


கணவரிடம் கோபத்தை இப்படியாம்மா காட்டுவது?  சாப்பிட உட்கார்ந்த கணவருக்கு நடந்ததை பாருங்க...!

கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே...ஊடல், கூடல் அத்தனையிலும் இந்த கெமிஸ்ட்ரி எதிரொலிக்கும்.

ஒரு நபரின் அன்றைய நாளை, குறிப்பாக மற்றவர்களுடன் அவர் பழகுவதைக் கூட, இதுதான் தீர்மானிக்கும். ஆம்...வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டு அலுவலகத்துக்கு வரும் ஆண்களைப் பாருங்கள். யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவார்கள். கணவரிடம் சண்டை போட்டிவிட்டு வேலைக்கு வரும் பெண்களிடமும் கூட இதன் தாக்கத்தைக் காண முடியும்.

அதிலும் சில பெண்கள் கணவரிடம் தன் கோபத்தைக் காட்டும் ஆயுதமாகவே சாப்பாட்டைத்தான் கையில் எடுப்பார்கள். அப்படித்தான் இங்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. லஞ்ச் டைமில் மனைவி வைத்துக் கொடுத்த சாப்பாட்டு பாத்திரத்தோடு போய் உட்கார்கிறார் கணவர். தட்டில், மனைவி செய்து கொடுத்த உப்புமாவைக் கவிழ்த்த அது கவிழவே இல்லை. பாத்திரத்தை திருப்பி வைத்து, தட்டு, தட்டு என தட்டுகிறார். ஆனால் சாப்பாடு வரவே இல்லை. ஏதோ பசை போட்டு ஒட்டியது போல் அப்படியே இருந்தது.

ஆனால் இவ்வளவுக்கு பின்பும் டென்ஷனே ஆகாமல் ரிலாக்ஸ்டாக அந்த கணவர் சிரித்த படியே தொடரும் முயற்சிகளை வீடீயோவாக எடுத்து, வெளியிட்டுள்ளார். இதை அவர் மனைவி பார்த்தால் கூட அவரும் விழுந்து, விழுந்து சிரிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :