காமத்தை காதல் என நினைத்து பின் தொடர்ந்த இளைஞன்... மணம் முடிந்த நிலையிலும் பெண் கேட்டு தராததால் கொலை செய்த சைகோ...! Description: காமத்தை காதல் என நினைத்து பின் தொடர்ந்த இளைஞன்... மணம் முடிந்த நிலையிலும் பெண் கேட்டு தராததால் கொலை செய்த சைகோ...!

காமத்தை காதல் என நினைத்து பின் தொடர்ந்த இளைஞன்... மணம் முடிந்த நிலையிலும் பெண் கேட்டு தராததால் கொலை செய்த சைகோ...!


காமத்தை காதல் என நினைத்து பின் தொடர்ந்த இளைஞன்...     மணம் முடிந்த நிலையிலும் பெண் கேட்டு தராததால் கொலை செய்த சைகோ...!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வந்தார். அவரை திடீரென காணாததால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி_தாராபுரம் சாலையில் ஏ நாகூர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. அது பிரகதியின் உடல் தான் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

விசாரணையில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சதீஷ் இத்தனைக்கும் மாணவியின் தூரத்து உறவினர். பிரகதியின் பள்ளிப்படிப்பின் போதே அவரை சதீஷ் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர் இப்போது தானே ஸ்கூல் படிக்கிறார் எனச் சொல்லி, பிரகதியின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் சதீஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துவிட்டது. ஆனாலும் பிரகதியை பெண் கேட்டு மீண்டும், மீண்டும் சதீஷ் அவரது வீட்டுக்கு போய் இருக்கிறார்.

இதனைப் பார்த்து பிரகதியின் வீட்டில் திருமணம் முடிந்தவர் பெண் கேட்கிறாரே என அதிசயத்து நின்றனர். ஆனால் சொந்தக்காரர் தானே என சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் பிரகதிக்கும், அவர் நேசித்த இளைஞருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருமண நிச்சயம் நடந்தது. இந்நிலையில் தான் கல்லூரிக்கு போன பிரகதி வீடு திரும்பவில்லை. காமத்தின் உச்சத்தில் சதீஸ் சைகோ கொலைகாரனாய் மாறி, வாழ வேண்டிய ஒரு இளம் பூவை சிதைத்து இருக்கிறான்.

மண்ணில் இப்படியும் இருக்கும் மனிதர்கள் என்று தான் திருந்துவார்களோ?


நண்பர்களுடன் பகிர :