ஆட்சியரான ஆதிவாசி பெண்... குடிசை வீட்டில் இருந்து சாதித்த மாணவி! Description: ஆட்சியரான ஆதிவாசி பெண்... குடிசை வீட்டில் இருந்து சாதித்த மாணவி!

ஆட்சியரான ஆதிவாசி பெண்... குடிசை வீட்டில் இருந்து சாதித்த மாணவி!


ஆட்சியரான ஆதிவாசி பெண்... குடிசை வீட்டில் இருந்து சாதித்த மாணவி!

கேரள மாநிலத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் ஆதிவாசி பெண் ஒருவர் ஆட்சியர் ஆகி அசத்தி உள்ளார். கரையான் அரித்த வீட்டில் இருந்து, அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் இந்த பெண் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பழங்குடி மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி. இங்கு தொழுவன்னா பகுதியில் உள்ள ஆதிவாசிகள் சுரேஷ், கமலம் தம்பதியினரின் மகள் தன்யாஸ்ரீ இவருக்கு ஐ.ஏ.எஷ் ஆக வேண்டும் என்று ஆசை.

இவர் டெல்லிக்கு தேர்வு எழுத அழைப்பு வந்த போதே, அவரிடம் போக பணம் இல்லை. உடனே அவரது பெற்றோர் தான் அக்கம், பக்கத்தில் இருந்து கடன் வாங்கி அவரை டெல்லிக்கு தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். அதில் தன்யா ஸ்ரீ வெற்றியும் பெற்றார்.

சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டில் லேப்டாப் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டவரின் இடது கை முறிந்தது. இந்த நிலையில் தன்யாவின் தேர்வு முடிவும் வந்தது. இதில் இந்திய அளவில் இந்திய குடிமைப் பணி தேர்வில் 410வது ரேங்க் எடுத்து அசத்தி உள்ளார் இந்த ஆதிவாசி பெண்...

போதிய வசதிகள் இல்லாத, வனத்துக்கு உள்ளே இருக்கும் ஆதிவாசிப் பெண் ஒருவர் கேரளத்தில் ஐ.ஏ.எஷ் அதிகாரி ஆவது இதுவே முதல் முறை!


நண்பர்களுடன் பகிர :

V
Venkatesan 2வருடத்திற்கு முன்
அருமை