குமரிமுத்து கல்லறையில் அவர் பிள்ளைங்க எழுதுனதை பாருங்க...! Description: குமரிமுத்து கல்லறையில் அவர் பிள்ளைங்க எழுதுனதை பாருங்க...!

குமரிமுத்து கல்லறையில் அவர் பிள்ளைங்க எழுதுனதை பாருங்க...!


குமரிமுத்து கல்லறையில் அவர் பிள்ளைங்க எழுதுனதை பாருங்க...!

மேலைநாட்டில் இருந்து வந்து தமிழ் வளர்த்த ஜி.யு.போப் தன் மரணத்துக்கு பின்பு, தன் கல்லறையில் தன்னை தமிழ் மாணவன் என எழுதச் சொன்னதை வரலாற்றில் படித்திருப்போம். அப்படியான ஒரு கலையை பிரதானப்படுத்திய வாசகத்தை நடிகர் குமரிமுத்துவின் வாரிசுகளும் அவரது கல்லறையில் எழுதி வைத்துள்ளனர்.

திருமணம் என்னும் நிக்காஹ், பகைவனுக்கு அருள்வாய் படங்களின் இயக்குநர் அனீஸ் இயக்குநர் மகேந்திரனின் அடக்கத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பார்த்த ஒரு விசயத்தை தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அது இப்போது வைரல் ஆகிவருகிறது.

அதில், ‘’மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குமரிமுத்து, அதிகமான மகேந்திரன் படங்களில் நடித்தவர். மந்தைவெளி சென்மேரிஸ் கல்லறை தோட்டத்தில் மகேந்திரனின் அஞ்சலிக்காக சென்ற போது தான், குமரி முத்துவின் கல்லறையையும் பார்த்தேன்.

பொதுவாகவே அஞ்சலி நிகழ்ச்சிக்கு முன்னமே சென்று அங்குள்ள பிரபலங்களின் கல்லறையை, அதில் உள்ள வாசகங்களை படிப்பது ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் நாடகமேதை சங்கரதாஸ் சுவாமிகள், பாரதிதாசன், காயிதேமில்லத், கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு, , படாபட் ஜெயலெட்சுமி என பலரது கல்லறைகளையும் வாசித்திருக்கிறேன். அப்படி மகேந்திரன் சார் நினைவுக்கு போன போது குமரிமுத்துவின் கல்லறையை பார்த்தேன்.

குமரிமுத்து மாறுகண்ணாகவும், மிகச்சாதாரண மனிதராகவும் இருந்து தன் திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர். திமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும், கிறிஸ்தவத்தை பரப்பும் ஊழியராகவும் இருந்தார். குமரி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அதையே அடைமொழியாக்கியவர். துவக்கத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இருந்தவர். ராதாரவியுடன் சண்டையிட்டு முதன் முதலில் சங்கத்தை விமர்சித்ததும் இவர் தான். அதனால் இவரை நடிகர் சங்கத்தில் இருந்தே நீக்க, அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்ற வரலாறும் அவருக்கு உண்டு.

இப்படிப்பட்ட மனிதரின் கல்லறையில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? it is the time for the god. to enjoy his laughter' அதாவது எங்களை தேவையான அளவுக்கு சிரிக்க வைச்சுட்டாரு. ஆண்டவரே இது உங்க சைம் அனுபவிங்க..”என்பது இதன் அர்த்தம். என்று எழுதியுள்ள அனீஸ் அடுத்து எழுதியது தான் வாழ்வியலின் ஆச்சர்யங்களை கொண்டது.

கல்லறை தோட்ட நுழைவாயிலின் அருகில் ‘இக்கல்லறையில் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை; என்று இருந்தது. எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் திரைப்படம் எடுக்க அனுமதிக்காத பூமியில் துவளப்போவதை நினைத்ஜ்து நகை முரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :