விவாகரத்துக்கு பின்னும் தந்தையாக செய்த கடமை... நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..! Description: விவாகரத்துக்கு பின்னும் தந்தையாக செய்த கடமை... நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..!

விவாகரத்துக்கு பின்னும் தந்தையாக செய்த கடமை... நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..!


விவாகரத்துக்கு பின்னும்  தந்தையாக செய்த கடமை...  நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..!

கடந்த வாரம் கோடப்பாக்கத்தின் மொத்த புள்ளிகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. காரணம் நடிகர் பார்த்திபன்_நடிகை சீதா ஆகியோரின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம் தான். இதில் பார்த்திபன் முன்னே நின்று ஓடியாடி வேலை செய்தார். தந்தையாக தன் கடமையில் நின்று சிறப்புடன் செயல்பட்டார். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இத்தனைக்கும் பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது. மகளோ சீதாவுடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழலிலும் பார்த்திபனின் பங்களிப்பு நெகிழ்ச்சியை கொடுக்க உள்ளம் உடைந்துபோய் இதுகுறித்து பேசி இருக்கிறார் நடிகை சீதா. ‘’என்னோட இரு பொண்ணுகளும் அப்பாவை மிஸ் செய்யக் கூடாது. அவர்களும் அப்பாவை மிஸ் செய்யக் கூடாதுன்னு தெளிவா இருந்தேன். எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு இருந்தாலும் மகளின் திருமணத்தில் அது இருக்கக் கூடாதுன்னு நினைச்சோம். ரெண்டு பேரும் தனித்தனியா பாதபூஜை செஞ்சோம்.

கன்னிகாதானத்தை என்னை விட அவரு செஞ்சா சிறப்பா இருக்கும்ன்னு நினைச்சேன். இதை அவருகிட்ட சொன்னதும் இரண்டு மகள்களுக்கும் செஞ்சாரு. பல்லக்கில் மகளை கூட்டி வரும் நிகழ்வையும் அவரே செஞ்சாரு. அவருக்கு நன்றிச் சொல்ல வேண்டியது கடமை.”என உருகியுள்ளார்.

தம்பதிகளின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு போன வருசம் கல்யாணம் நடந்தது. அதிலும் பார்த்திபன் தந்தையாக முன்வந்து நின்றார்.

விவாகரத்து பெற்றதும் குடும்பத்துக்கும், மனைவிக்கும் குட்பை சொல்லிவிட்டு இன்னொரு திருமணம் செய்து செட்டிலாகிவிடுகிற ஆண்களுக்கு மத்தியில் பார்த்திபன் தாயுமானவர் தான்!


நண்பர்களுடன் பகிர :