கோடைக்கு இயற்கையின் கொடை தர்பூசணி... அதை சரியாக தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? Description: கோடைக்கு இயற்கையின் கொடை தர்பூசணி... அதை சரியாக தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி?

கோடைக்கு இயற்கையின் கொடை தர்பூசணி... அதை சரியாக தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி?


கோடைக்கு இயற்கையின் கொடை தர்பூசணி... அதை சரியாக தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி?

கோடைகாலம் வாட்டி எடுக்கத் துவங்கி விட்டது. கோடையில் தெருவெல்லாம் தர்பூசணி பழ விற்பனையகங்களும் முளைத்து விட்டன. இதில் நல்ல தர்பூசணி பழத்தை எப்படி தேர்ந்தெடுப்பது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மண்ணில் கொடியாக பரவும் தர்பூசணி பழம் தரைப்பகுதியில் தான் இருக்கும். அந்த காயில் தரையில் உள்ள பாகம் மஞ்சள் வண்ணத்துக்கு மாறும். அதேபோல் தர்பூசணி பழமானது நல்ல மஞ்சள் நிறத்தில் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் பிசு,பிசுப்புடன் இருக்கும். இதற்கு மாறாக தரையில் இருக்கும் பகுதி வெண்மையாக இருந்தால் அது பழுக்காத பழம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தர்பூசணி பழத்தின் மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கூடுகள் இருந்தால், அந்த பழம் அடிபட்டதாக நினைத்து பெரும்பாலானோர் தவிர்த்து விடுவோம். ஆனால் அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும். காரணம், தர்ப்பூசணி பூ வாக இருக்கும் போது தேன் எடுக்க வரும் தேனீக்களால் அயல் மகரந்த சேர்க்கை நடக்கும். அதனால் பூவின் இதழ்களில் தழும்புகள் ஏற்பட்டும்விடும். காயாகி, கனியானதும் அது வலைபின்னலாக மாறி பழத்தில் இருக்கும். இந்த வகை தர்பூசணி பழங்கள் அதிக சுவையுடன் இருக்கும்.

மனிதர்கள், விலங்குகளை போலவே தர்ப்பூசணியிலும் ஆண், பெண் இனமுண்டு. ஆண் தர்பூசணி பெரிதாகவும், நீள்வடிவத்துடனும் இருக்கும். இந்த பழங்கள் அதிக நீர் கொண்டதாகவும், ருசி குறைவாகவும் இருக்கும். பெண் தர்பூசணி ருசியாகவும், வட்ட வடிவிலும் இருக்கும். தர்பூசணி பழத்தின் காம்பு காய்ந்து இருந்தால் அந்த பழம் காய்ந்துவிட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாக பறிப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.

தர்ப்பூசணிக்கு பல விவசாயிகள் அதிக அளவில் ரசாயன மருந்தை பயன்படுத்துகின்றனர். நைடெர்ர்ட் அதிகம் பயன்படுத்துவதால் மூன்றே வாரத்தில் பழங்கள் பெரிதாகி விடுகிறது. இத்தகைய பழத்தை தவிர்க்க வேண்டும். ஆனால் எப்படி இதை கண்டுபிடிப்பது? அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

பழத்தை இரண்டாக வெட்டும்போது, நடுப்பகுதி வெள்ளையாகவும், பழத்தின் தோல் பகுதிக்கும் பழத்துக்கும் இடையில் மஞ்சள் நிறமாகவும் காணப்பட்டால் அது நைட்ரேட் தாக்கம் அதிகம் உள்ள பழம் எனவும் கண்டுபிடிக்கலாம். இதுதவிர பழங்களின் ஒரு இடத்தில் மட்டும் சிறப்பு நிறமாக இருந்தால் அந்த பழங்களிலும் நைட்ரேட் செலுத்தப்பட்டு இருக்கலாம். பழத்தை இரண்டாக வெட்டும் போது நடுப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் இருந்தால், அது வளர்ச்சி ஹார்மோன் செலுத்தப்பட்ட பழமாக இருக்கலாம்.

அதிகமாக பழுத்த தர்பூசணி பழங்கள் கொஞ்சம் கசப்பு சுவையுடன் இருக்கும். தர்ப்பூசணி பழத்தின் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு வைக்கலாம். சிறிதுநேரம் கழித்து தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறி இருந்தால் அது ரசாயனம் ஏற்றப்பட்ட பழமாக இருக்கலாம். இதையெல்லாம் தவிர்க்க சத்தான தர்பூசணி பழங்களை இயற்கை அங்காடிகளில் வாங்கி சாப்பிடலாம்.


நண்பர்களுடன் பகிர :