அசரவைக்கும் ஆதிச்சநல்லூரின் தொன்மை.. கிறிஸ்து பிறப்புக்கும் முந்தைய வரலாற்றை வெளியிட்டது தொல்லியல் துறை..! Description: அசரவைக்கும் ஆதிச்சநல்லூரின் தொன்மை.. கிறிஸ்து பிறப்புக்கும் முந்தைய வரலாற்றை வெளியிட்டது தொல்லியல் துறை..!

அசரவைக்கும் ஆதிச்சநல்லூரின் தொன்மை.. கிறிஸ்து பிறப்புக்கும் முந்தைய வரலாற்றை வெளியிட்டது தொல்லியல் துறை..!


அசரவைக்கும் ஆதிச்சநல்லூரின் தொன்மை.. கிறிஸ்து பிறப்புக்கும் முந்தைய வரலாற்றை வெளியிட்டது தொல்லியல் துறை..!

தமிழகத்தின், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் தொன்மத்தை தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. கிறிஸ்து பிறப்புக்கும் முன்னரான அதன் வரலாறு நம் தமிழர்களின் பெருமைக்கு சான்றாக உள்ளது.

கீழடி அகழாய்வுக்கும் முன்பே, தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் இதன் முடிவுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இதனால் ஆதிச்சநல்லூரில் மீண்டும் ஒரு அகழாய்வு நடத்தக் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில், விசாரணை நடத்திய நீதிபதிகள், அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதன் பின்னர் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பி மத்திய அரசு பெற்று வைத்திருந்த அறிக்கையை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில் தான் ஆச்சர்யமான பல தகவல்கள் கிடைத்துள்ளது. கார்பன் பகுப்பாய்வு செய்யப்பட்ட இரு பொருள்களின் காலம் கி.மு 905 மற்றும் கி.மு.971 என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவில் இது கிறிஸ்து பிறப்புக்கும் முந்தைய பாரம்பர்ய பெருமை உடையது எனத் தெரிய வந்துள்ளது. இதேபோல் எந்த ஆய்வினை யாரை வைத்து நடத்துவது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தொல்லியல் துறையிடம், ஆய்வை மத்திய அரசு செய்ய வேண்டுமா? அல்லது மாநில அரசு செய்ய வேண்டுமா எனவும் அறிக்கை கேட்டுள்ளது தமிழகம்.

இந்த ஆய்வு முடிவுகள் முழுதாக ஆய்வு செய்யப்பட்டு வெளிவந்தால் தமிழரின் வரலாறை உலகே போற்றும்!..அறிந்தும் கொள்ளும்..


நண்பர்களுடன் பகிர :