உங்கள் உணவுக்குடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? எளிமையாய் அறிந்து கொள்ள சில ஐடியாக்கள்..! Description: உங்கள் உணவுக்குடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? எளிமையாய் அறிந்து கொள்ள சில ஐடியாக்கள்..!

உங்கள் உணவுக்குடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? எளிமையாய் அறிந்து கொள்ள சில ஐடியாக்கள்..!


உங்கள் உணவுக்குடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? எளிமையாய் அறிந்து கொள்ள சில ஐடியாக்கள்..!

நம் உணவுக்குடலில் லட்சக்கணக்கான பாக்டீரீயாக்கள் உள்ளன. இவைதான் நாம் சாப்பிட்ட உணவுகளை ஜீரணிக்க வைக்கும் வேலையைத் தூண்டுகிறது. இதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலையை செய்கிறது. இந்த உணவுகுழாய் தான் நம் வாழ்வின் ஓட்டத்துக்கு கைகொடுக்கும் முக்கிய விசயங்களில் ஒன்று.

இந்த உணவுக்குடலுக்கு நன்மை செய்யும் உணவுகள், பழக்கவழக்கங்களும் உண்டு. கெடுதல் செய்பவையும் உண்டு. இந்த உணவுக்குடல் பாதிப்பை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம். ஆரம்பநிலையிலேயே இதை தெரிந்து கொண்டால் குணப்படுத்துவதும் எளிது. இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

வயிற்றில் உப்புசம் மற்றும் வாய்வு, இதனால் நம் வயிறு காற்று அடைத்தது போல் இருக்கும். அசளெரியமாக பீல் செய்வோம். இதேபோல் மலச்சிக்கல் உருவாகும். மலத்துடன் ரத்தம் கலந்து வருவது, திடீரென மூலநோய் வருவதெல்லாம் உணபுக்குடல் பாதிப்பின் அறிகுறிகளே...

மலம் மிகுந்த துர்நாற்றம் கொண்டு இருக்கும். அடிக்கடி அடிவயிற்றில் வலி, வயிற்று பிடிப்பு உண்டாகும். செரிமானக் கோளாறு ஏற்படும். வாந்தி வந்தால் உடனே மருத்துவரை நாட வேண்டும். நாக்கு வெள்ளை நிறத்தில் மாறினால் உணவுக்குழாய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கும். மூட்டு வலி உருவாகும்.

உணவுக்குடல் பாதிப்புக்கு அதிக புரதச்சத்து, தானியங்கள், காய்கறி உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரீயாக்களைக் கூட்டும். அதிகமான கார்போஹைட்ரேட், அதிக சர்க்கரை உணவைத் தவிர்ப்பதன் மூலம் உணவுக்குழாயை பாதுகாக்க முடியும். அடிக்கடி ஆண்டி பயாடிக் சாப்பிடுவதாலும் உணவுக்குழாயில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரீயாக்கள் அழிந்து போகும். அதிக மதுப்பழக்கமும் உணவுக்குழாயைக் கெடுக்கும். அடிக்கடி சூடாக்கி சாப்பிடும் உணவுகள் குடல் நோய்களை உருவாக்கும்.

இதையெல்லாம் செய்தாலே உங்கள் உணவுக்குழாயும் ஆரோக்கியமாக இருக்கும். தீயன விட்டு, நல்லன தொட்டு இன்றே முயற்சியை தொடங்குங்கள்...


நண்பர்களுடன் பகிர :