உழவு ஓட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்... மயங்கிய ராஜலெட்சுமி..! Description: உழவு ஓட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்... மயங்கிய ராஜலெட்சுமி..!

உழவு ஓட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்... மயங்கிய ராஜலெட்சுமி..!


உழவு ஓட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்... மயங்கிய ராஜலெட்சுமி..!

கார்ப்பரேட் நிறுவனமான விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட் ஷோக்களை நடத்திய பெருமைக்கு உரியது. தற்போது அந்த சேனலானது உழவின் பெருமையை பேசும் வகையிலும், உழவுக்கு உயிரூட்டும் வகையிலும் தனது அடுத்த முயற்சியை துவங்கியுள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீயா? நானா? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி புகழின் உச்சத்துக்கே சென்ற கோபிநாத் தான், இந்த விவசாய நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளர். இதில் சின்னத்திரை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என தலைப்பிட்டு அனைவரும் வயலில் இறங்கி விவசாயம் செய்கின்றனர். இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் மகுடம் அடைந்த செந்திலும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் கலந்து கொண்டு உழவு செய்கின்றனர். ராஜலெட்சுமியின் குடும்பம் நெய்தல் தறி அடிக்கும் குடும்பம் என்று அவரே சொல்லியிருந்தார்.

அப்படி உழைக்கும் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் அவர் லேசாக மயங்குவது போலும், செந்தில் உழவு ஓட்டுவது போலவும் காட்சிகளை விஜய் டிவி ப்ரமோவாக வெளியிட அது சோசியல் மீடியாக்களில் ஹிட் அடித்து வருகிறது. இந்நிகழ்வில் உழவு செய்வது கஷ்டம் என கோபிநாத்ம் கருத்து தெரிவிக்கிறார்.

உழவனின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் தயாராகி வரும் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வயலில், வெயிலில் இருந்து உழவர்கள் படும்பாடும் வெளி உலகம் அறிய முடியும்.


நண்பர்களுடன் பகிர :