பேருந்தில் தலைகீழாய் தொங்கிய மாணவன்... எங்கே செல்கிறது இளம் தலைமுறை? அதிர்ச்சி வீடீயோவைப் பாருங்க..! Description: பேருந்தில் தலைகீழாய் தொங்கிய மாணவன்... எங்கே செல்கிறது இளம் தலைமுறை? அதிர்ச்சி வீடீயோவைப் பாருங்க..!

பேருந்தில் தலைகீழாய் தொங்கிய மாணவன்... எங்கே செல்கிறது இளம் தலைமுறை? அதிர்ச்சி வீடீயோவைப் பாருங்க..!


பேருந்தில் தலைகீழாய் தொங்கிய மாணவன்...   எங்கே செல்கிறது இளம் தலைமுறை? அதிர்ச்சி வீடீயோவைப் பாருங்க..!

இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கிப் போய் கிடக்கின்றனர். அதிலும் ஏராளமான நல்ல விசயங்கள் கொட்டிக் கிடக்க, அவர்களின் கவனம் முழுவதும் ஏதாவது வித்யாசமாகச் செய்து டிக் டாக், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் டிரெண்டாக வேண்டும் என்பதிலேயே இருக்கிறது.

இப்படி ஒரு பதிவுக்காக ஒரு மாணவன் செய்த செயல் இப்போது இளம் தலைமுறை குறித்து வேதனை அடைய வைத்துள்ளது. அதில் ஓடும் பேருந்தில் துள்ளி ஏறும் பள்ளிச் சீறுடை அணிந்த இரு மாணவர்கள் பேருந்தின் ஜன்னல் கம்பியை பிடித்து தலைகீழாகத் தொங்கி சாகசம் செய்கிறார்கள். இதை பின்னாலேயே ஓடி வந்து அவர்களின் நண்பர்கள் சிலர் முகநூலில் பதிவேற்றியுள்ளனர்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்னும் அளவுக்கு வித்தை காட்டும் இந்த வீடீயோவை பெற்றோர்கள் பார்த்தால் கண்ணீர் வடித்து விடுவார்கள்.

ஆனால் இதை சாகசம் போல் நினைத்துக் கொண்டு செய்யும் இந்த மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்தும், அவர்களையே நம்பி இருக்கும் அவர்களின் பெற்றோர்களின் எதிர்காலமும் ஏன் தெரிவதில்லை?


நண்பர்களுடன் பகிர :