கோடை வெயிலை சாமாளிக்க இதை செய்யுங்க போதும்...! Description: கோடை வெயிலை சாமாளிக்க இதை செய்யுங்க போதும்...!

கோடை வெயிலை சாமாளிக்க இதை செய்யுங்க போதும்...!


கோடை வெயிலை சாமாளிக்க இதை செய்யுங்க போதும்...!

கோடை வெயிலின் உக்கிரம் பயமுறுத்துகிறது. வீடை விட்டி வெளியேவே செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அப்படியான சூழலில் இந்த கோடை வெயிலை எப்படி எதிர்கொள்வது, என்ன வகையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி டெல்சியஸ். சுற்றுப்புறத்தில் இருக்கும் வெப்பநிலை நம் சராசரி வெப்பநிலையை விட அதிகரிக்கும் போது, நமக்கு வியர்வை ஏற்படுகிறது. இந்த வியர்வையினால் உப்பு, நீர்ச்சத்தும் போய் விடுகிறது. இதனால் கோடையில் அதிக தாகம், தலைவலி,சோர்வு, தலைசுற்றல், குறைவாக சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை ஏற்படும்

இந்த கோடை பச்சிளம் குழந்தைகள், வளரிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்களை வெகுவாக பாதிக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் கோடையில் சிறுநீர் செல்ல வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமான அளவுக்கு தண்ணீர் குடிக்கிறோம் என்பது தெரியும். நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதே ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

பகலில் வீட்டு ஜன்னல்களை பூட்டியும், இரவில் குளிர்ச்சிக்காய் திறந்து வைக்கவும் வேண்டும். இதேபோல் சாலையில் கோடை வெயிலால் யாரும் மயங்கி விழுந்து விட்டால் அவர்களை சுற்றி, பத்து பேர் நிற்காமல் அவருக்கு காற்று கிடைக்கும் அளவுக்கு இடைவெளி விட வேண்டும். பாராசிட்டாமல் மற்றும் ஆஸ்பிரின் ரக மாத்திரைகளை கொடுக்கவே கூடாது. அவர்களை ஒருபக்கமாக சாய்ந்து தான் படுக்க வைக்க வேண்டும். உடலில் ஐஸ்கட்டி வைத்து குளிர்ச்சியை கொடுக்க வேண்டும்.

கோடை காலத்தில் அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் பொடி வாங்கி, ஒரு லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். வெளியில் போகும் போது கொஞ்சம் தளர்வான உடைகளையும் அணிய வேண்டும். அப்புறமென்ன கோடையின் சூட்டை ஊதித்தள்ளுங்க...


நண்பர்களுடன் பகிர :