இது சுமையல்ல....சுகம்! ஆறுவருடமாக மாற்றுத்திறனாளி நண்பனை தூக்கி செல்லும் சிறுவன்...! Description: இது சுமையல்ல....சுகம்! ஆறுவருடமாக மாற்றுத்திறனாளி நண்பனை தூக்கி செல்லும் சிறுவன்...!

இது சுமையல்ல....சுகம்! ஆறுவருடமாக மாற்றுத்திறனாளி நண்பனை தூக்கி செல்லும் சிறுவன்...!


இது சுமையல்ல....சுகம்!    ஆறுவருடமாக மாற்றுத்திறனாளி நண்பனை தூக்கி செல்லும் சிறுவன்...!

'உயிர் கொடுப்பான் தோழன்’’ என நட்பின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அந்த அளவுக்கு எந்த ஒரு மனிதனுக்கும் அவனது நண்பர்கள் தான் உறவுகளையெல்லாம் தாண்டிய பெரும் சொத்து. சீனாவில் அப்படி உண்மை நட்புக்கும் இலக்கணமான ஒரு சம்பவம் தான் இந்த பதிவு.

சீனாவில் கிச்சுவான் மாகாணத்தில் மீஷன் நகரத்தில் ஸீ பிங்யாங் என்று ஒரு சிறுவன் உள்ளான். அவனுக்கு 12 வயது. அவன் வசிக்கும் அதேபகுதியில் ஸாங் ஸீ என்னும் மாற்றுத்திறனாளி சிறுவனும் வசித்து வருகிறான். சின்ன வயதில் இருந்தே இவர்கள் இருவரும் நண்பர்கள். நட்பு என்றால் அப்படியொரு நட்பு. எப்படி என்கிறீர்களா?

மாற்றுத்திறனாளி சிறுவனான ஸாங் ஸீயை கடந்த ஆறு வருடங்களாக ஸீ பிங்யாங் தான் அவன் தோளில் சுமந்து கூட்டிப் போகிறான். பள்ளிக்கூடத்துக்கு போனால் அங்கு சாப்பிடும் இடம், ஏன் இண்டர்வெல்லில் யூரின் செல்வது என எதுவுமே ஸாங் ஸீக்கு தனிமையில் சாத்தியம் இல்லாதது. ஆனால் அங்கெல்லாம் கூட தன் நண்பன் ஸீ பிங்யாங் தோளில் தான் சுமந்து செல்கிறார்.

ஆனால் இதை வெளியில் இருந்து நாம் பேர் உதவியாக பார்க்கையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸீ பிங்யாங், ‘’நான் 40 கிலோ. என் பிரண்ட் 25 கிலோ. அவனை தூக்கிட்டு நடப்பதில் எனக்கு சுமையே இல்ல. நண்பனுக்கு ஊன்றுகோளாக இருப்பதை நினைச்சு சுகம் தான். “என்கிறார்.

தோளில் அமர்ந்து பயணிக்கும் ஸாங் ஸீ, அரியவகை தசை நோயால் நான்கு வயதிலேயே நடக்க முடியாமல் போனவர். நண்பன் இல்லையெனில் தான் இல்லை என உருகுகிறார். இதை விட ஆச்சர்யம் ஒன்று உள்ளது. ஸீ பியாங், பள்ளியில் தினமும் இப்படி நண்பனை தோளில் சுமந்து உதவி செய்து குறித்து தன் பெற்றோரிடம் கூட சொன்னதில்லையாம். அண்மையில் இதைப்பற்றி சீன ஊடகம் ஒன்று எழுதிய பின்னர் தான் அவர்களுக்கே தெரியுமாம்...!


நண்பர்களுடன் பகிர :