புயல் வந்த போதும் அசராமல் கடமையை செய்த போலீஸ்.. வீடீயோ பாருங்க நெகிழ்ந்து போயிடுவீங்க...! Description: புயல் வந்த போதும் அசராமல் கடமையை செய்த போலீஸ்.. வீடீயோ பாருங்க நெகிழ்ந்து போயிடுவீங்க...!

புயல் வந்த போதும் அசராமல் கடமையை செய்த போலீஸ்.. வீடீயோ பாருங்க நெகிழ்ந்து போயிடுவீங்க...!


புயல் வந்த போதும் அசராமல் கடமையை செய்த போலீஸ்.. வீடீயோ பாருங்க நெகிழ்ந்து போயிடுவீங்க...!

போலீஸாரின் கடமைக்கு நேரம், காலமே கிடையாது. தீபாவளி, பொங்கல் என பண்டிகைக்காலங்களில் நாம், நம் உறவினர்களோடு கொண்டாடிக் கொண்டு இருப்போம். அப்போதும் கூட போலீஸார் ஏதோ ஒரு மூலையில் நம் நலனுக்காக பணி செய்து கொண்டிருப்பார்கள்.

பண்டிகைக்காலம் தான் என்றில்லை. இயற்கை பேரிடர்களின் காலத்திலும் அவர்கள் பணி அப்படித்தான். மழை, வெயில், புயல், கடல் கொந்தளிப்பு என எதுவே நடந்தாலும் அவர்களின் பணியே பிரதானம். அப்படி ஒரு சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் ஏற்பட்டு வீசிக் கொண்டிருக்கிறது. மழையும் வேகமாக பெய்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் காற்றும் வேகமாக வீசுகிறது. இத்தனைக்கும் மத்தியில் மிதுன் தாஸ் என்ற காவல்துறை அதிகாரி ‘ரெயின் கோட்’ கூட இல்லாமல் நின்று வாகனங்களுக்கு வழிகாட்டுகிறார்.

. இந்த வீடீயோவை அஸ்ஸாம் மாநில காவல்துறையே தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளது. அதில் ‘’வேலைக்கு மிகுந்த விஸ்வாசமாக இருக்கும் மிதுன்தாஸ்க்கு வணக்கம் செலுத்துகிறோம்.”என போடப்பட்டுள்ளது.

இந்த நேர்மையான காவல்துறை அதிகாரியை நாமும் பாராட்டலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :