8 மணி நேரம் தூங்கு....இல்லைன்னா சீக்கிரமே ஊதிடுவாங்க சங்கு.. நல்லா தூங்குங்க பாஸ்...பல பிரச்னைகளுக்கு காரணமே தூக்கமின்மை தான்! Description: 8 மணி நேரம் தூங்கு....இல்லைன்னா சீக்கிரமே ஊதிடுவாங்க சங்கு.. நல்லா தூங்குங்க பாஸ்...பல பிரச்னைகளுக்கு காரணமே தூக்கமின்மை தான்!

8 மணி நேரம் தூங்கு....இல்லைன்னா சீக்கிரமே ஊதிடுவாங்க சங்கு.. நல்லா தூங்குங்க பாஸ்...பல பிரச்னைகளுக்கு காரணமே தூக்கமின்மை தான்!


8 மணி நேரம் தூங்கு....இல்லைன்னா சீக்கிரமே ஊதிடுவாங்க சங்கு..  நல்லா தூங்குங்க பாஸ்...பல பிரச்னைகளுக்கு காரணமே தூக்கமின்மை தான்!

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் மிக,மிக அவசியம். உடலில் பல நோய்களுக்கும் தூக்கமின்மையே அடிப்படைக் காரணம் ஆகிவிடுகிறது.

நாள் முழுவதும் நாம் ஓடி, ஓடி உழைத்ததற்கு உறங்கும் நேரம் தான் இளைப்பாறுதலாக இருக்கிறது. தூக்கம் குறைந்து, நீண்ட நேரம் வேலை செய்வது நம் ஆயுளையும் கணிசமாகக் குறைத்துவிடும். ஒவ்வொரு வயதினருக்கும் தூங்கும் கால அளவும் வேறுபடும். சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

அப்படி தூங்காவிட்டால் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதிக்கும். இதனால் கிளைட்டுகேன் என்னும் மூலப்பொருள் நம் உடலில் குறைந்து அடிக்கடி உடல் நலக்குறைவை சந்திக்க வேண்டி வரும். இதனால் பல நோய்த்தொற்றுகளும் ஏற்படும். தூக்கம் இல்லாவிட்டால் 45 சதவிகித இதயநோய்க்கு வாய்ப்பு ஏற்படும். இதயம் சீராக இயங்காது. நம் இரத்த அழுத்தமும் தாறுமாறாக மாறிப் போகும்.

6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களின் உடல் எடையும் அபரிமிதமாக கூடிவிடும். ஞாபகக்தியை அதிகரிக்கவும், சீராக்கவும் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

மேலும் குறைவாக தூங்குபவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகம். தூக்கம் சரியாக இல்லாவிட்டால் நல்ல தம்பத்ய வாழ்விலும் சிக்கல் ஏற்படும். நல் தம்பத்யத்திற்கு நல்ல தூக்கம் வழிவகுக்கும். 8 மணி நேர தூக்கம் நீண்ட ஆயுளைத் தரும்.

குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு மன அழுத்தமும் ஏற்படும்.சருமப் பிரச்னைகளையும் தீர்க்கும். இத்தனை பலன்களையும் பெற, நீங்க பெருசா எதுவும் செய்ய வேண்டியதில்லை. நல்லா தூங்குங்க...


நண்பர்களுடன் பகிர :