வீடியோ போட்ட ஊழியரின் வேலையை பறித்தது சொமோட்டோ! பிரச்னை குறித்து மால் தரப்பும் விளக்கம்...! Description: வீடியோ போட்ட ஊழியரின் வேலையை பறித்தது சொமோட்டோ! பிரச்னை குறித்து மால் தரப்பும் விளக்கம்...!

வீடியோ போட்ட ஊழியரின் வேலையை பறித்தது சொமோட்டோ! பிரச்னை குறித்து மால் தரப்பும் விளக்கம்...!


வீடியோ போட்ட ஊழியரின் வேலையை பறித்தது சொமோட்டோ!  பிரச்னை குறித்து மால் தரப்பும் விளக்கம்...!

புதுச்சேரியில் உள்ள தனியார் மால் ஒன்று உடையைக் காரணம் காட்டி, சொமோட்டோ உணவு டெலிவரி ஊழியரை மாலில் இருந்து வெளியேற்றும் வீடீயோ சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடீயோவில் உள்ள சொமோட்டோ டெலிவரி ஊழியரின் இன்றைய நிலை தெரியுமா? இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

அந்த ஊழியரின் பெயர் அசோக். அவர் அங்கு பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. உணவுக்கான ஆர்டர் எடுக்க மாலுக்கு போயிருக்கும் போதே அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீடீயோவை பேஸ்புக்கில் போட்டதுமே, சொமோட்டோவில் இருந்தும், மால் தரப்பில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டாங்க, நானும் நேரில் போனேன்.

உன்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. எங்க மேல தப்பு இல்ல. நீ வீடீயோவை டெலிட் பண்ணுன்னு சொன்னாங்க. இதுக்கையில் என் டீம் லீடர் எனக்கு போன் பண்ணி, ரிசைன் பண்ணிட்டு, டீசர்ட்டை கொடுத்துட்டு போன்னு சொன்னாரு. உடனே வேலையை ரிசைன் பண்ணிட்டேன். ஆனால் மறுபடியும் சொமோட்டோவில் இருந்து போன் போட்டு வேலையை ரிசைன் பண்ணச் சொன்னாங்க.

ஆனா நான் தான் வேலையை ரிசைன் பண்ணிட்டேனே, இனி பொதுமக்களில் ஒருத்தனா இருந்து இதை பார்த்துக்குறேன்னு சொன்னேன். அதுக்கு என் மேல, கேஸ் போடுவேன்னு சொன்னாங்க. போடுங்க பார்த்துகிடுகேன்னு சொல்லிட்டு போனை வைச்சுட்டேன்.

ஆனா இது சொமோட்டோவில் மட்டுமல்ல, எல்லா ஆன்லைன் உணவு டெலிவரியிலும் இதே நிலமை தான். நான் பேசிட்டேன். வேற யாரும் பேசல. மால்லயும் சரி, வேலை செய்யும் நிறுவனத்துலயும் சரி குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமத்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். “என்று சொல்லி வருகிறார்.

ஆனால் மால் தரப்போ, ‘’ஆரம்பத்துலயே இது உங்களுக்கான வழி இல்லன்னு அமைதியாத்தான் சொன்னோம். ஆனா அவரு அதை எடிட் பண்ணி போட்டுருக்காரு. இது மாதிரி மால்களில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நிறுவனத்துக்கு பொருள் எடுத்துட்டு வர்றவங்களுக்குன்னு தனித்தனியாத் தான் வழி இருக்கும். வாடிக்கையாளருக்கு இடையூறு இல்லாம இருக்க கடைபிடிக்கும் விதிதான் இது.

தோளில் பேக்கை மாட்டுகிட்டு இவுங்க எஸ்குலேட்டரில் போகும் போது வாடிக்கையாளர்கள் தவறி விழுக வாய்ப்பு இருக்கு. அதனால் தான் அந்த வழியில் அனுமதிக்கது கிடையாது. இவரு மட்டும் தான் உள்நோக்கத்தோட இப்படி செஞ்சாருன்னு விளக்கம் கொடுத்துள்ளது மால் தரப்பு!


நண்பர்களுடன் பகிர :