10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..! Description: 10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..!

10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..!


10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது  சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..!

சாதிக்க வயது தடையல்ல. அதற்கான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் போதும் என்பார்கள். அப்படி திட்டமிட்டு சாதனை புரிந்துள்ள தமிழ்ச் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார்_தாரணி தம்பதியினரின் மகன் ஐஸ்வந்த்(10) தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு முதல் நடந்து வரும் நீச்சல் போட்டிகளில் தவறாது கலந்துகொண்டு பரிசை தட்டி வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டில் அவருடைய 8வது வயதில் தொடர்ந்து 81 நிமிடங்கள் நீந்தி உலகசாதனை படைத்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக நீச்சல் வீரன் குற்றாலீஸ்வரனைப் போல் பாக்ஜலசந்தியை கடந்து சாதனை படைக்க விரும்பி இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளுடன் தலைமன்னார் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கடந்த வியாழக் கிழமை அதிகாலை 4 மணிக்கு நீந்தத் துவங்கிய ஐஸ்வந்த், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை பிற்பகல் 2.30க்கு வந்தடைந்தார்.

முன்னதாக கடந்த 1994ம் ஆண்டு பாக்ஜலசந்தியை 16 மணி நேரத்தில் குற்றாலீசுவரன் கடந்திருந்தார். அந்த சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாதனை சான்றும் இந்திய கடலோர காவல் படையினர் வழங்கியுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :